தமிழ்நாடு பட்ஜெட் 2024- 25 முக்கிய அம்சங்கள்.

 தமிழ்நாடு பட்ஜெட் 2024- 25  முக்கிய அம்சங்கள்.

 2024- 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்…

சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.  தாக்கல் செய்யப்பட்ட புதிய அறிவிப்புகள் மற்றும் அதன் முக்கிய அம்சங்களை காணலாம்.

புதிய அறிவிப்புகள் – அதன் அம்சங்கள்

தமிழ்ப் புதல்வன் – ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு

அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்

கலைஞரின் கனவு இல்லம் – ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு

2023-ம் ஆண்டிற்குள் வீடொன்றிற்கு ரூ.3.5 லட்சத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்

விருதுநகர் மற்றும் சேலம் – ரூ.2,483 கோடி நிதி ஒதுக்கீடு

மாவட்டங்களில் ஜவுளிப் பூங்காக்கள் அமைத்துத் தரப்படும்

அடையாறு நதியை சீரமைக்கும் திட்டம் – ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு

திண்டுக்கல்,  நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் – ரூ.1,289 கோடி நிதி ஒதுக்கீடு

கோயம்புத்தூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா – ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு

வடசென்னை வளர்ச்சித் திட்டம் – ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு

பழங்குடியினர், வாழ்விடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும்                       வாழ்வாதாரத்தை உயர்த்துதல்

நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகள் – ரூ.960 கோடி நிதி ஒதுக்கீடு

பிராட்வே பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் விரிவாக்கப் – ரூ.823 நிதி ஒதுக்கீடு

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே 27 தளங்களை கொண்ட நகர்ப்புரச் சதுக்கம் – ரூ.688 கோடி நிதி ஒதுக்கீடு

ஊராட்சி ஒன்றிய ஏரிகள், குளங்களை சீரமைத்தல் – ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

பூந்தமல்லியில் அதிநவீனத் திரைப்பட நகரம் – ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

ஊரகப் பகுதிகளில் 2,000 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் – ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு

நீலக் கொடி கடற்கரைகள் சான்றிதழ் பெற முக்கியமான கடற்கரைகளை மேம்படுத்துதல் – ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு

கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு புதிய ஒன்றிணைந்த வளாகம் – ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு

பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு – ரூ.213 கோடி நிதி ஒதுக்கீடு

கல்லூரிகளில் புதிய திறன் பயிற்சிக் கட்டமைப்புகள் – ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...