வரலாற்றில் இன்று ( 13.05.2024)

 வரலாற்றில் இன்று ( 13.05.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 13 கிரிகோரியன் ஆண்டின் 133 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 134 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 232 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1515 – பிரான்சு அரசி மேரி டூடோர், சபோல்க் பிரபு சார்லசு பிரான்டனை கிரேனிச்சு நகரில் அதிகாரபூர்வமாகத் திருமணம் புரிந்தார்.
1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் படைகள் லாங்சைடு என்ற இடத்தில் நடந்த சமரில் அவளது உடன்பிறப்பான யேம்சு ஸ்டுவர்ட்டின் இசுக்கொட்லாந்திய சீர்திருத்தத் திருச்சபைப் படைகளிடம் தோற்றன.
1648 – தில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
1656 – ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து கொழும்பைக் கைப்பற்றினர்.[1]
1765 – யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டார்.[2]
1787 – ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கப்டன் ஆர்தர் பிலிப் இங்கிலாந்து போர்ட்ஸ்மவுத் துறையை விட்டுப் புறப்பட்டார்.
1830 – எக்குவாடோர் கொலம்பியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1846 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது.
1861 – பெரும் வால்வெள்ளி ஒன்று ஆஸ்திரேலியாவில் வின்சர் நகரில் அவதானிக்கப்பட்டது.
1861 – பாக்கித்தானில் முதலாவது தொடருந்து சேவை கராச்சி முதல் கோத்ரி வரை ஆரம்பிக்கப்பட்டது.
1880 – நியூ செர்சியில் மென்லோ பூங்காவில் தாமசு ஆல்வா எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார்.
1888 – பிரேசில் பேரரசு அடிமைமுறையை இல்லாதொழித்தது.
1939 – முதலாவது எஃப்எம் வானொலி நிலையம் ஐக்கிய அமெரிக்காவில் கனெடிகட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் இராணுவம் மியூசே ஆற்றைத் தாண்டி பிரான்சினுள் புகுந்தது. முற்றுகை ஆரம்பமானது.
1940 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தினுள் நாட்சி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்லெல்மினா பிரித்தானியாவுக்கும் இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன் கனடாவுக்கும் தப்பி ஓடினர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: வட ஆப்பிரிக்காவில் செருமனிய, இத்தாலியப் படையினர் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர்.
1952 – இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
1954 – சிங்கப்பூரில் தேசியத்துக்கு எதிராக சீனப் பாடசாலை மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றது.
1958 – அல்ஜியர்சில் பிரெஞ்சு இராணுவ அதிகாரிகள் சிலர் இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர்.
1960 – உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர்.
1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.
1969 – மலேசியாவில் கோலாலம்பூரில் சீன மலேசியர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர்.
1971 – வங்காளதேசம், தெம்ரா நகரில் 900 இற்கும் அதிகமான வங்காள இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1972 – சப்பான், ஒசாக்காவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 118 பேர் உயிரிழந்தனர்.
1981 – ரோம் நகரில் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் திருத்தந்தை காயமடைந்தார்.
1985 – பிலடெல்பியாவில் மூவ் என அவைக்கப்படும் கறுப்பின விடுதலைக் குழு ஒன்றின் தலைமையகம் மீது காவல்துறையினர் குண்டு வைத்துத் தகர்த்ததில், ஐந்து சிறுவரக்ள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
1996 – வங்காள தேசத்தில் வீசிய கடும் புயலில் சிக்கி 600 பேர் வரையில் இறந்தனர்.
1997 – இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.[3]
1998 – இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சீனர்களுக்கெதிராக இனக்கலவரம் ஆரம்பமானது.
1998 – இந்தியா மே 11 இற்குப் பின்னர் மேலும் இரண்டு அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் சப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன.
2005 – உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் காவற்துறையினர் போராட்டக் காரர் மீது சுட்டதில் 187 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – அல்லைப்பிட்டிப் படுகொலைகள்: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தனர்.
2006 – திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.
2007 – திருகோணமலை மொறவேவாப் பகுதியில் பொங்குதமிழ் உட்படப் பலநிகழ்வுகளில் முன்னின்று கலந்துகொண்ட வணக்கத்துக்குரிய நந்தரத்ன தேரோ இனம் தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.
2011 – பாக்கித்தானில் சார்சாதா மாவட்டத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில், 98 பேர் கொல்லப்பட்டனர், 140 பேர் காயமடைந்தனர்.
2014 – துருக்கியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 301 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
2018 – இந்தோனேசியாம் சுராபாயாவில் மூன்று கிறித்தவத் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1221 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி, உருசிய இளவரசர், புனிதர் (இ. 1263)
1754 – யாக்கூப் ஆஃப்னர், செருமானிய-டச்சு பயண எழுத்தாளர் (இ. 1809)
1792 – ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1878)
1841 – இராபர்ட் இசுடேன்சு, பிரித்தானியத் தொழிலதிபர், வள்ளல் (இ. 1936)
1857 – ரொனால்டு ராஸ், நோபல் பரிசு பெற்ற இந்திய-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1932)
1882 – ஜோர்ஜெஸ் பிராக், பிரான்சிய ஓவியர் (இ. 1963)
1883 – ஜியார்ஜியோ பாபனிகொலாவு, பாப் சோதனையைக் கண்டுபிடித்த கிரேக்க-அமெரிக்க மருத்துவர் நோயியலாளர் (இ. 1962)
1905 – பக்ருதின் அலி அகமது, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் (இ. 1977)
1914 – அந்தோனியா பெரின் மொரீராசு, எசுப்பானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 2009)
1916 – சச்சிதானந்த ராவுத்ராய், இந்திய ஒரிய மொழிக் கவிஞர் (இ. 2004)
1918 – தஞ்சாவூர் பாலசரஸ்வதி, இந்திய நடனக் கலைஞர் (இ. 1984)
1920 – கு. மா. பாலசுப்பிரமணியம், தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1994)
1948 – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், இலங்கை உரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயர்
1956 – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய மதகுரு
1968 – இசுக்காட் மொரிசன், ஆத்திரேலியாவின் 30-வது பிரதமர்
1981 – சன்னி லியோனே, கனடிய அமெரிக்க நடிகர்
1984 – பென்னி தயாள், இந்தியப் பாடகர்
1986 – ராபர்ட் பாட்டின்சன், ஆங்கிலேய நடிகர்
1987 – காண்டைஸ் அக்கோலா, அமெரிக்க நடிகை
1993 – ரொமேலு லுக்காக்கு, பெல்ஜிய காற்பந்து வீரர்

இறப்புகள்

1835 – ஜான் நாசு, ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1752)
1878 – ஜோசப் ஹென்றி, அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1797)
1898 – பி. ஆர். ராஜமய்யர், தமிழக எழுத்தாளர் (பி. 1872)
1930 – பிரிட்ஜோப் நான்ஸன், நோபல் பரிசு பெற்ற நோர்வே அறிவியலாலர் (பி. 1861)
1961 – கேரி கூப்பர், அமெரிக்க நடிகர் (பி. 1901)
1978 – வி. தெட்சணாமூர்த்தி, ஈழத்துத் தவில் கலைஞர் (பி. 1933)
2000 – தாராபாரதி, தமிழகக் கவிஞர் (பி.1947)
2001 – ஆர். கே. நாராயண், இந்தியப் புதின எழுத்தாளர் (பி. 1906)
2005 – ஜார்ஜ் டாண்ட்சிக், அமெரிக்கக் கணிதவியலாளர் (பி. 1914)

சிறப்பு நாள்

*****

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...