எவரெஸ்ட் சிகரத்தில் 29-வது முறையாக ஏறி சாதனை படைத்தார் கமி ரீட்டா..!
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 29-ஆவது முறையாக ஏறி அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறியவர் என்ற சாதனையைத் படைத்துள்ளார்.
எவரெஸ்ட் மலை கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது பூமியின் மிக உயரமான மலை சிகரமாகும். நேபாளத்தை சேர்ந்த கமி ரீட்டா 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார். எவரெஸ்ட் மலையடிவாரத்தில் ஷெர்பா சமூகத்தை சேர்ந்தவர் கமி ரீட்டா (54). அவர் எவரெஸ்ட் சிகரத்தை முதன்முறையாக 1994ம் ஆண்டு தனது 24 வயதில் ஏறினார். கின்னஸ் புத்தகத்தின் படி, ‘எவரெஸ்ட் மேன்’ என்றும் அழைக்கப்படும் கமி ரீட்டா ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில், கொரோனா தொற்றுநோய் காரணமாக நேபாளத்தில் எவரெஸ்டின் தெற்குப் பகுதி ஏறுபவர்களுக்கு மூடப்பட்டு, 2021 ஆம் ஆண்டு ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டது. மே 2021 ஆம் ஆண்டு கமி ரீட்டா தனது 25வது ஆண்டாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து மீண்டும் சாதனை படைத்தார்.
2023ம் ஆண்டு, கமி ரீட்டா எவரெஸ்ட் சிகரத்தை 27ஆவது முறையாக ஏறி, சக வழிகாட்டியான பசாங் தாவா ஷெர்பாவுடன் சாதனையை சமன் செய்தார். தொடர்ந்து அந்தாண்டு மே மாதம் கமி ரீட்டா தனது 28வது எவரெஸ்ட் ஏறுதலை முடித்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்தார்
இந்நிலையில், காத்மாண்டுவில் இருந்து ஸ்பிரிங் சீசன் எவரெஸ்ட் பயணத்தை 28 பேர் கொண்ட குழுவுடன் மேற்கொண்ட கமி ரீட்டா, உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டின் 71 ஆண்டுகால மலையேறுதல் வரலாற்றில் அதிக அளவில் 29ஆவது முறையாக ஏறி வராலாற்று சாதனை படைத்துள்ளார். மே 12ஆம் தேதி காலை 7.25 மணியளவில் அவர் அடைந்தார்.