இந்தியாவில் உள்ள சுங்கசாவடிகள் அனைத்தும் விரைவில் அகற்றப்படும் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளை எல்லாம் அகற்றிவிட்டு வாகனங்களுக்கு ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இது அடுத்த மாதமே அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு மத்திய அரசு சுங்க கட்டணத்தை வசூல் செய்து வருகிறது. இதற்காக ஆங்காங்கே சுங்க சாவடிகளை அமைத்து அதன் மூலம் சுங்க கட்டணத்தை வசூல் செய்கிறது. இதற்காக பாஸ்ட்டேக் கார்டுகளையும் மத்திய அரசு வாகனங்களுக்கு கட்டாயம் ஆக்கியுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்கள் கார்டுகளை ரீசார்ஜ் செய்து அதை வைத்து சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல முடியும்.
நேரடியாக சுங்கச்சாவடிகளில் பணமாக சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த பணம் செலுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் காலதாமதம் காரணமாக இந்த பாஸ்ட் டேக் கார்டு கொண்டுவரப்பட்டது. இந்த பாஸ்டேக் கார்டு கொண்டு வந்தால் விரைவாக வாகனங்கள் சுங்கச்சாவடியில் காத்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் கடந்து செல்ல முடியும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது.
ஆனால் இந்த ஃபாஸ்ட் டேக் கார்டு பயன்பாட்டுக்கு வந்த போதும் சுங்கசாவடிகளில் நீளமான வரிசை இருந்து கொண்டு தான் இருக்கிறது. பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இல்லை. இது அரசுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை காண வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது.
ஒரே நேரத்தில் ஒரே வாகனத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளை பயன்படுத்துவது இப்படியான காத்திருப்பதற்கு கொஞ்சம் பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்பதால் ஒரு வாகனத்திற்கு ஒரே ஃபாஸ்டேக் கார்டு தான் என்ற கொள்கையை தற்போது மத்திய அரசு எடுத்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால் திட்டம் என்பது சுங்கச்சாவடிகளில் வாகன காத்திருப்பு காலத்திற்கு ஒரு நிரந்தர தீர்வாக இருக்க முடியாது என தெரிகிறது. இதனால் மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த சுங்கச்சாவடி வசூல் முறையை முற்றிலுமாக மாற்றி அமைக்க பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டது.
அதன்படி ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கச்சாவடி கட்டண வசூல் முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தொழிற்நுட்ப சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் எப்பொழுது வேண்டுமானாலும் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கச்சாவடி வசூல் முறை அமலுக்கு வரும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்நிலையில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இதற்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி தற்போது ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறை என்பது அடுத்த மாதமே அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார். இதனால் சுங்க சாவடிகள் முழுமையாக நீக்கப்பட்டு வாகனங்களில் உள்ள ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டணத்தை மக்கள் செலுத்த வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் முன்னரே இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது உங்கள் சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்க வேண்டிய தேவை இல்லை. ஃபாஸ்டேக் கார்டு இல்லாதவர்கள் இரண்டு மடங்கு பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. உங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் மூலமே நீங்கள் நேரடியாக வங்கி கணக்கில் மூலம் பணத்தை செலுத்தி விட முடியும்.
இது மட்டுமல்லாமல் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட் கண்காணிப்பு கேமரா மூலம் உங்கள் கார் கண்காணிக்கப்பட்டு உங்கள் கார் எந்த பகுதி வழியாக எந்த நேரத்தில் கடந்துள்ளது என்பதை வைத்து சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும். தற்போது பாஸ்ட்டேக் கார்டுகளுக்கான கேஒய்சி செய்யும் கால அவகாசத்தை பிப்ரவரி 29ம் தேதி வரை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது. அதற்குள் கேஒய்சி செய்யாத பாஸ்ட்டேக் கார்டுகள் செயலிழக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.