மக்கள் நீதி மய்யத்தின் அவசர ஆலோசனை கூட்டம்..!

 மக்கள் நீதி மய்யத்தின் அவசர ஆலோசனை கூட்டம்..!

மக்கள் நீதி மய்யத்தின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடக்க உள்ள நிலையில், கூட்டணி குறித்த அறிவிப்பையும் அக்கட்சி இன்றைய தினமே அறிவிக்கும் என்று நம்பப்படுகிறது.

எம்பி தேர்தல் விரைவில் வரப்போகிறது.. இதனால் அரசியல் கட்சிகள் மும்முரமாகி வருகின்றன.. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யமும் தேர்தலுக்கு தயாராக வருகிறது. இந்த முறை கூட்டணி வைத்துதான் போட்டியிட வேண்டும் என்பதில் கமல் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

அந்தவகையில், கமலுக்கு மட்டும் ஒரு இடம் ஒதுக்குவதற்கு, திமுக கூட்டணியில் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், எப்படியாவது 3 இடங்களை, திமுக மேலிடம் கேட்டு பெற்று விட வேண்டும் என்பதிலும் மய்யத்தினர் உறுதியாக இருக்கிறார்களாம்.. அதேபோல, கடந்த முறை போலவே, இந்த முறையும் கோவை தொகுதியில் போட்டியிடவே கமல் விரும்புவதாக தெரிகிறது.

இது குறித்து ஸ்டாலினிடமும் ஏற்கனவே அவர் கமல் தரப்பில் தெளிவுப்படுத்தப்பட்டதாம்.. அதற்கு ஸ்டாலினும் “நல்லது நடக்கும்” என்று மட்டும் சொன்னாரே தவிர, எந்தவிதமான உத்தரவாதத்தை தரவில்லையாம். முதல்வர் இப்படி தயங்குவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

அதாவது, கோவை தொகுதியானது ஏற்கனவே இடதுசாரிகள் வசம் இருக்கிறது. இப்போது, கோவையை கேட்கிறார் என்றதுமே, சிபிஎம் அதிர்ச்சியாகி விட்டதாட்ம. அதனால், திமுக மேலிடத்திடம் இதுகுறித்து பேசியிருக்கிறது. “சிட்டிங் தொகுதியை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.. தொகுதியில் நிறைய வளர்ச்சி பணிகளை செய்து வந்துள்ளோம்.. அதனால் தொகுதியை எங்களிடமிருந்து பறித்து விடாதீர்கள் ” என்று ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டார்களாம்.

அதனால்தான், கோவை தொகுதி வேண்டும் என்று கமல் கேட்டதற்கு, “நல்லது” நடக்கும் என்று மட்டும் சொன்னாராம். இதற்கு பதிலாக, பெரம்பலூர் தொகுதியை கமலுக்கு ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாக தெரிகிறது. காரணம், இந்த தொகுதியில் அமைச்சர் சிவசங்கருக்கும், ஆ.ராசாவுக்கும், முட்டுக்கட்டைகள் உள்ளதால், இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே, பெரம்பலூரை கமலுக்கு ஒதுக்கிவிடலாம் என நினைக்கிறாராம்.. அதுபோலவே, மநீம மதுரை தொகுதியை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.. ஆனால், இந்த மதுரையும் தோழர்கள் வசம் உள்ளது.. அதனால், மதுரையையும் திமுக ஒதுக்க முன்வருமா என்று தெரியாது.. அப்படியானால், கமலுக்கு தென்சென்னையை ஒதுக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இப்படி பல்வேறு யூகங்கள் வட்டமடித்து வரும்நிலையில்தான், இன்று மநீம ஆலோசனை கூட்டம் கூடுகிறது. இன்று காலை 11.30 மணிக்கு தமிழக நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறவுள்ளது. கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடு தொடர்பான அறிவிப்புகள் வெளியிட தலைமை திட்டமிட்டிருக்கிறது.

அதுபோல, கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் தேர்தலை எதிர்கொள்வது எப்படி, தனித்து போட்டியிடலாமா அல்லது பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா? கூட்டணி அமைத்தால், மக்களின் ஆதரவு கிடைக்குமா? என்பது பற்றியெல்லாம் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு கூட்டணியை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்றும் தகவல்கள் சொல்கின்றன. எதுவானாலும், இன்றைய தினம் கூட்டணி அறிவிப்பை மய்யம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...