உயர்ந்து வரும் முல்லைப்பெரியாறு நீர்மட்டம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..! | சதீஸ்
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த அணை 152 அடி உயரம் கொண்டது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.25 அடியாக இருந்த நிலையில், அணைக்குள் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், நீர்வரத்து அதிகரித்தால் பிற்பகல் 12 மணியளவில் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது. இதனையடுத்து, அணையின் கீழ்புறப் பகுதியில் கரையோரத்தில் வசிக்கும் கேரள மக்களுக்கு தமிழக பொதுப் பணித்துறையினர் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.