
அத்தியாயம் 13
முதலில் சுதாகரித்துக் கொண்டது மணிமாறன் தான். அதற்குள் டாக்டர் நினைவு தப்பி தரையில் விழுந்த பிருந்தாவை கவனிக்கத் தொடங்கியிருந்தாள். எதிர்பாராத அதிர்ச்சியில் பிரஷர் அதிகமாகியிருந்தது அவளுக்கு. நர்சை அழைத்து ஊசி மருந்து கொண்டு வரச் சொன்னாள். வினாடிகளில் நர்ஸ் மருந்தை கொண்டு வர அதை பிருந்தாவின் இடுப்பில் ஏற்றினாள். சில நிமிடங்களில் கண் விழித்தவள் மலங்க மலங்க விழித்தாள். டாக்டர் அவளை பெட்டிற்கு அழைத்துச் செல்ல நர்சிற்கு பணித்தாள்.
மணிமாறன் பேச்செழாமல் அமர்ந்திருந்தார் டாக்டரின் முன்.
“சொல்லுங்க மிஸ்டர் மணிமாறன் இந்த சின்ன வயசுல அதுலயும் ஸ்கூல் படிக்கிற வயசுல உங்க பொண்ணு கர்ப்பமா இருக்கறா எப்படி சார்?”
“அதான் டாக்டர் எனக்கும் புரியலை நீங்க சரியா பார்த்துத் தான் சொல்லுறீங்களா?”
“என்ன சார் என் ப்ரபொஷன சந்தேகப் படுறீங்களா? இந்த கொடைக்கானலுல ஒன் ஆஃப் தி ஃபெஸ்ட் கைனகாலேஜிஸ்ட் நான். வெளியே விசாரிச்சுப் பாருங்க. பல்ஸ் புடிச்சு பார்த்த உடனே சொல்லிடுவோம் டாக்டர் நாங்க.சந்தேகத்தைப் போக்க யூரின் டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்தேன் அதிலயும் பாசிட்டிவ்னு வந்தப்புறம் தான் கன்ஃபார்ம் பண்ணுனேன். டாக்டர் தப்பாச் சொல்லுறாங்களோங்கற சந்தேகத்தை எல்லாம் விட்டுட்டு அடுத்து என்ன செய்யலாம்னு யோசிங்க.
மணிமாறன் பித்துப் பிடிக்கும் நிலைக்குச் சென்றிருந்தார். எந்தத் தகப்பனும் சந்திக்கக் கூடாத நிலை இது. பதிநாலு வயது மகளே ஒரு குழந்தை அவள் வயிற்றில் ஒரு குழந்தை என்றால் யாரால் தாங்கிக் கொள்ள முடியும்?
டாக்டர் கேட்டாள்.. “உங்க பொண்ணுக்கு லவ் அஃபேர்ஸ் எதாவது இருந்துச்சா?”
“டாக்டர் அவ ஒரு குழந்தை அவளுக்கு பதினாலு வயசுதான் ஆகுது”
“மணிமாறன் உங்களுக்கு எத்தனை வயசானாலும் உங்க மக என்னிக்குமே குழந்தை தான், ஆனா மெடிக்கலி அவ ஒரு வயசுக்கு வந்த பெண், கருத்தரிச்சு குழந்தை பெத்துக்க முடியற பெண். நீங்க குழந்தைங்கறீங்க இந்த இண்டர் நெட் உலகம் அவங்களுக்கு எல்லாத்தையும் சின்ன வயசுலயே கத்துக் குடுத்திருது. பெண் குழந்தைக வளர வளர அவங்க மேல நம்ம போகஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும்.கோட்டை விட்டா இப்படிப்பட்ட அவமானங்களுல விழுந்து தான் ஆகணும்”
“டாக்டர் நீங்க என்ன வேணா சொல்லுங்க என் பொண்ணு ஒரு சின்னக் குழந்தை தான்”
“சரி சார் அவ வயித்துல ஒரு சின்னக் குழந்தை உருவாகியிருக்கே அது எப்படி?”
“டாக்டர் எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு”
“டெஸ்ட் பண்ணிப் பார்த்ததுல உங்க பொண்ணு வயத்துல 45 நாள் கரு உருவாகியிருக்குதுன்னு ஊர்ஜிதம் ஆயிருக்கு, அடுத்து என்ன செய்யணும்னு முடிவு செஞ்சுக்கங்க. எனக்கு நெறய பேஷண்ட் வெய்ட்டிங்ல இருக்கறாங்க. யு மே கோ நவ்” என்றவள் அடுத்த நோயாளியை அழைக்க அழைப்பு மணியை அழுத்தினாள்.
டாக்டர் கூறி முடித்ததும் ஒரு எந்திரம் போல் இருக்கையிலிருந்து எழுந்தார் மணிவண்ணன். திரைத் தடுப்பிற்கு அப்பால் இருந்த ப்ரியவை எழுப்பி வெளியே அழைத்து வந்தார். டாக்டர் டெஸ்ட் செய்ததால் வலியின் சாயை முகத்தில் பிரதிபலிக்க தந்தையின் பின்னாள் நடந்தாள் அவள். கோபமும் ஆற்றாமையும் கலந்து ஒரு கணம் தன்னை மறந்த மணிமாறன் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று அறியாமல் அது ஒரு பொது இடம் என்றும் பார்காமால் டாகரின் முன்பு வைத்தே “அடிப் பாவி மகளே என்ன காரியம்டீ செஞ்சுட்டு வந்து நிக்கற” என்று கூறிவிட்டு மகளை அடி அடியென்று அடிக்க ஆரம்பித்தார். ஒரு கணம் என்ன செய்வது என்று திகைத்த டாக்டர் அங்கயற்கண்ணி “ஹலோ மிஸ்டர் நீங்க படிச்சவர் தானே லோ கிளாஸ் பியூப்பிள் மாதிரி நடந்துக்கறீங்க. இதுல பெத்தவங்க தப்பு தான் அதிகம் குழந்தைகளை சரியா வளர்க்காத உங்களை யாரு அடிக்கிறது?. இப்ப மகளை அடிச்சா எல்லாம் சரியாப் போயிடுமா? அடுத்து என்ன செய்யணும்னு நிதானமா யோசிங்க, சின்னப் பொண்ணு அது என்ன ஏதுன்னு தெரியாம எதாவது பண்ணிடப் போகுது. நிலமை மோசம் தான் அதை உங்க கோபத்தால ரொம்ப மோசமாக்கிடாதீங்க. பொண்ணை அழைச்சிட்டு ஊருக்குப் போங்க, நிதானமா அவ கிட்ட பேசுங்க, இந்தக் காரியத்தை செய்த பையன் யாருன்னு அவ கிட்டக் கேளுங்க அடுத்து என்ன செய்யிறதுன்னு நீங்களும் உங்க மனைவியும் நிதானமா பேசி முடிவெடுங்க” டாக்டர் கூறவும் சற்று கோபம் தணிந்த மணிமாறன்..
“ஸாரி டாக்டர் ஒரு நிமிஷம் நான் என்னையே மறந்திட்டேன் என்னால தாங்க முடியலை டாக்டர்” என்றவர் தன்னை மறந்து தான் ஒரு பெரிய மனிதன் என்பதையும் மறந்து குலுங்கிக் குலுங்கி அழுதார். தந்தை ஏன் தன்னை அடித்தார் இப்பொழுது ஏன் அழுகிறார் என்று புரியாமல் திகைத்து நின்றாள் ப்ரியா.
“மிஸ்டர் மணிமாறன் இப்ப எமோஷனல் ஆகற நேரம் இல்லை பாருங்க உங்க மனைவி இதைக் கேட்டதும் மயக்கமாயிட்டாங்க போய் அவங்கள கவனியுங்க”
“சாரி டாக்டர்” என்றவர் மகளை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பினார். தந்தையின் பின்னால் சென்றவள் யோசித்தாள் ‘இதுவரை தன்னை அடைத்திராத தந்தை ஏன் இன்று என்னைப் போட்டு தாறு மாறாக அடித்தார்? யோசிக்க யோசிக்க அவளுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.அதிர்ச்சியில் தன் பின்னே இன்னும் குழந்தைத்தனம் மாறாத முகத்துடன் வந்து கொண்டிருக்கும் மகளைப் பார்க்கப் பார்க்க மீண்டும் அழுகை பொத்துக் கொண்டு வந்தது அவருக்கு.
மகளுடன் பிருந்தா இருந்த அறைக்குச் சென்றார்.. பிருந்தாவை பெட்டில் பார்த்த பிரியா ஓ வென்று அழுது விட்டாள்.. “ஏம்மா உங்களுக்கு என்ன ஆச்சு? அப்பா ஏன் என்னை அடிக்கறார்” கள்ளங் கபடமில்லாத அந்தக் குழந்தைக்கு என்ன பதில் சொல்லுவது என்று தோன்றாமல் சிலையாய் அமர்ந்திருந்தாள் பிருந்தா.
ரிசப்ஷன் சென்று நர்சிடம் கேட்டார் மணிமாறன்.. “சிஸ்டர் என் மனைவிக்கு எப்படி இருக்குது?”
“ஒண்ணும் சீரியஸ் இல்லை சார் டக்குன்னு ஒரு பிரஷர் இங்கிரீஸ் அவ்ளவுதான் இன்னும் ஒரு டூ அவர்ஸ் ரெஸ்ட் எடுத்ததும் நீங்க அவங்களை அழைச்சிட்டுப் போகலாம்” நர்ஸ் கூறவும் மீண்டும் நடந்து பிருந்தா இருந்த அறைக்குச் சென்றார். சென்றவர் பெட்டின் ஓரத்தில் அமர்ந்தார்.அமர்ந்தவர் கேட்டார் மெல்லிய குரலில்..
“ஏன் பிருந்தா பொண்ணுக்கு பாதுகாப்பா இருக்கணும்னு தானே உன்னை கல்யாணம் பன்ணிக்கிட்டேன் அதுக்கு நீ குடுத்த பரிசா இது?”
கணவனின் கேள்வியால் ஆடிப் போனாள் பிருந்தா ஒரு கணம். அவள் கண்களில் கண்ணீர்..
“சாரிங்க என்னை மன்னிச்சுடுங்க..இவ போக்குல எந்த மாற்றத்தையும் பார்க்க முடியலைங்க, ஒரு குழந்தை ஸ்கூலுக்குப் போற மாதிரிதான் போயிட்டு வந்திட்டிருந்தா. காருல ஸ்கூலுக்குப் போறா வீட்டுக்கு வர்றா அப்புறம் எப்படிங்க?’’
“ஏன்னைக் கேட்டா? தாய் தான் புள்ளை மேல கவனமா இருக்கணும்”
“நான் இருந்தேங்க”
“அப்புறம் இது எப்படி?”
“தெரியலையேங்க”
பித்துப் பிடிக்கும் நிலைக்குப் போய்க் கொண்டிருந்தாள் பிருந்தா. தந்தையும் தாயும் என்ன பேசிக் கோள்கிறார்கள் என்பது புரியாமல் பதுமயாய் அமர்ந்திருந்தாள் ப்ரியா.
டாக்டரிடம் கூறிவிட்டு பிருந்தாவை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு தங்கியிருக்கும் ஓட்டலுக்குக் கிளம்பினார். அங்கிருந்து உடமைகளை சேகரித்துக் கொண்டு காரில் கிளமினார்கள் அவர்கள். இன்பத்தில் மலையேறியவர்கள் பெரும் துன்பத்தை சுமந்து மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்.
காரில் அமர்ந்திருந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள்வில்லை. காரில் அமர்ந்திருந்த மூவரின் மனமும் மூன்று விதமாய் சிந்தித்துக் கொண்டிருந்தது.
‘தன் மகளா இப்படி? குழந்தைத்தனம் மாறாத முகத்தை வைத்துக் கொண்டு எத்தனை பெரிய மோசமான காரியத்தை செய்திருக்கிறாள் என் மகள்?!’
‘நான் தவறு செய்துவிட்டேனா? ஒரு தாய் என்ற ஸ்தானத்தை நான் ஒழுங்காகக் கவனிக்கவில்லையா? மகளின் ப்ரீயட் காலத்தைக் கூட எப்படி மறந்தேன்? வாழ்நாள் முழுவதும் கணவன் முகத்தை எப்படிக் காண்பது? வீட்டிற்குச் சென்றதும் கணவனுக்கு என்ன பதில் சொல்லுவது எப்படி அவரைத் தேற்றுவது? மகளுக்குக் ஒரு பாதுகாவல் தேவை என்றுதான் என்னை கல்யாணம் செய்து கொண்டார். அந்தப் பாதுகாப்பை நான் சரியாகச் செய்யவில்லையோ?’ இது பிருந்தா.
‘இங்கு என்ன நடக்கிறது? அப்பா என்னை ஏன் அடித்தார்? டாக்டர் திரை மறைவுல கொண்டு போய் எதுக்கு என்னோட ஸ்கர்ட்டை விலக்கி டெஸ்ட் பன்ணுனாங்க? எனக்கு ஏன் வாமிட் வாமிடா வந்துச்சு? எனக்குள்ள என்ன தப்பு நடக்குது? நான் என்ன தப்பு செய்தேன்? அடுக்கடுக்கான கேள்விவிகள் இது பிரியாவிற்குள்.
யாரும் யாருடனும் பேசாத நீண்ட பயணமாய் அமைந்தது கொடைக்கான லிலிருந்து அவர்கள் வீட்டிற்கான அந்தப் பயணம்!
(-தொடரும்…)
முந்தையபகுதி – 13 | அடுத்தபகுதி – 15
