தமிழ்நாட்டில் பரவும் புதியவகை கொரோனா – அமைச்சர் மா.சுப்ரமணியன்..! | சதீஸ்

 தமிழ்நாட்டில் பரவும் புதியவகை கொரோனா – அமைச்சர் மா.சுப்ரமணியன்..! | சதீஸ்

தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் தொன்மைத் தமிழ்நாடு என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் மொழி அறிஞர்கள்,  தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.  பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

காய்ச்சல் பாதிப்புகள் அதிமாக உள்ள பகுதிகளில் ஆர்.டி.பின்.சி.ஆர் பரிசோதனை
மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  புதிய வகை வைரஸ் தொற்று கேரளாவில்  230 என்று உயர்ந்துள்ளது.  இதுவரை 1100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிதமான பாதிப்பு உள்ளதாக தான் சொல்லப்பட்டு வருகிறது.  இந்த தொற்று 3,4 நாட்களில் சரி ஆகிவிடும் என்பதால் பதற்றம் தேவை இல்லை.  அரசு ஆர்.டி.பி.சி.ஆர் மையங்கள் 78, 253 தனியார் மையங்களும் என மொத்தம் 331 ஆர்.டி.பின்.சி.ஆர் மையங்கள் தமிழ்நாட்டில் உள்ளது.

தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு இருக்கும் இடங்களில் பரிசோதனை அதிகரிக்க
முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.  புதியதாக 264 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில்,  8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதில் சென்னையை சேர்ந்தவர்கள் 2 பேர். அவர்களுக்கு இருமல், சளி தான் உள்ளது.  கொரோனா பல்வேறு மாதிரியாக உறுமாருகிறது.  இது எந்த வகையான உருமாதிரிகள் என்பதை கண்டறியப்பட்டு பின்னர் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...