அழகே அழகு
தினமும் தயிரை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர வறண்ட , முகம் முகத்தில் காணப்படும் கோடுகள் முகத்தில் தென்படும் மேடு பள்ளங்கள் நீங்கி விடும்
முகப்பரு மறைய தயிரில் கடலைமாவை கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் களைத்து ஊறவைத்து பின் முகத்தை கழுவி வர முகப்பரு மறைந்துவிடும்
நாள்தோறும் தயிரை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் ஊறவைத்து பின் முகத்தை கழுவி வர வறண்ட முகம் முகத்தில் இருக்கும் கோடுகள் மேடு பள்ளங்கள் என அனைத்திற்கும் நிரந்தர தீர்வாக காணப்படும்.
உலர்ந்த துளசி வேப்பிலை புதினா ஆகிய இலைகளை எடுத்து கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து பன்னீருடன் சேர்த்து அரைத்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சென்றாகிவிடும்.
நல்லெண்ணெயில் வெள்ளைப்பூண்டு, துத்தி இல்லை இவைகளை போட்டு காய்ச்சு முகப்பரு மீது தடவி வர முகப்பருவு மறைந்தோடும்
சிலருக்கு முகத்தில் மூக்கில் கன்னங்களில் என நிறைய கருப்பு நிற திட்டுக்கள் காணப்படும். இதை மங்கு என சொல்வார்கள். இவற்றை போக்க தேவையான அளவு ஜாதிக்காய் சந்தனம் வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்து முகத்தில் கருப்பு திட்டுக்கள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து இதை கையாண்டால் மங்கு மறைந்து விடும்.
கோதுமை மாவுடன் பால் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் முகம் வெண்மையாகவும் அழகாகவும் ஜொலிக்கும் .
தலைமுடி அடர்த்தியாக கருப்பாக வளர செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சு வடிகட்டி எடுத்து கொள்ளவும் குளிக்கும் முன்பு தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும் இப்படி தினமும் செய்து வந்தால் கூந்தல் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.
தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென்று பொலிவாகும் .
மஞ்சள் பூசி குலைப்பது மலையேறிப்போன ஓல்ட் பேஷன் ஆகிவிட்டது கரும்புள்ளி பருக்கள் மாசு வெப்ப பாதிப்பு அலர்ஜி அனைத்தையும் போக்கி சருமத்தை மெருகேறச்செய்யும்.
பாதங்களை எழுமிச்சைப் பழத்தோலால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நன்றாகத் தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும்