கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை அகற்ற டிப்ஸ்
பாலின பாகுபாடு இன்றி ஆண்கள், பெண்கள் இருவருமே கண்ணாடி அணிந்து கொள்ளும் எண்ணிக்கையின் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுகள் மட்டுமின்றி மொபைல் போன்களும் காரணியாக விளங்குகிறது
சோடாபுட்டி கண்ணாடி முகத்தையே மறைக்கும் வகையெல்லாம் மாறி கலர்கலராக கான்டாக்ட் லென்ஸ் சமயத்திற்கு கைகொடுத்தது
இரவு கழட்டி வைத்து பிறகு அதை பொருத்தும்போது தவறி விட்டு தேடும் நிலையும் உண்டு
எனவே கண்ணாடியின் அளவுகள் மாறியது ஆயினும் மசியில் எழுதும்போது நகலெடுப்பதைப் போல கண்ணாடி தன் அடையாளத்தை ஆணவமாய் நம் முகத்தின் மேல் விட்டுச்செல்லும்
அந்த அடையாளங்களை அழிக்க மிக எளிமையான முறையில்
கண்ணாடி தழும்பு மறைய டிப்ஸ்.
உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிக்காயை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இருக்கும் தோல் பகுதியை சீவிவிட்டு. வட்ட வடிவில் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.
இந்த கட் செய்த துண்டுகளை தழும்புகள் உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின்பு 15 நிமிடுங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர கண்ணாடி அணிவதினால் ஏற்படும் தழும்புகள் (spectacle marks) மறைந்து விடும்.