நீட் ஆள்மாறாட்டக்கில் – இர்பான் தந்தை சபி டாக்டர் இல்லை
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான இர்பான் தந்தை சபி டாக்டர் இல்லை: சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல். மருத்துவ படிப்பை சபி, பாதியிலேயே நிறுத்தியது விசாரணையில் தெரியவந்தது. மருத்துவப்படிப்பை முழுமையாக நிறைவு செய்யாமலேயே மருத்துவமனை நடத்தி வந்தார் – சிபிசிஐடி
இதில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த முகமது இர்பான் என்ற மாணவரும் ஒருவர். அவரை மருத்துவம் படிக்க வைக்க நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை டாக்டர் முகமது ஷபியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர், மொரீசியஸ் நாட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்ட இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்
அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். விரைவில் சேலம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அவரை காவலில் எடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான இர்பானின் தந்தை முகமது சபி டாக்டர் அல்ல என சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் மருத்துவ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மருத்துவ தொழில் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளன