தேசதந்தை காந்தியின் பிறந்தநாள்
நமது தேச தந்தை காந்தியின் 150வது பிறந்தநாள் 2018ம் ஆண்டு தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வெறும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியாக, ஒரு வழக்கறிஞராக 21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த காந்தி, இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களிடம் அகிம்ஷா வழியில் போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார்.
காந்தி குஜராத் மாநிலத்தில் உள்ள “போர்பந்தர்” என்னும் இடத்தில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாள் கரம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய் என்கிற தம்பதிக்கு மகனாக பிறந்தார். அவரது இயற்பெயர் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்த பெயரே பின்னாளில் மருவி காந்தி என்றானது. இன்று நம் அனைவராலும் “தேசத்தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.
நம் வாழ்வின் ஏதேனும் ஓர் சூழ்நிலையில் துன்பத்தைச் சந்திக்க நேரிட்டாலும், மனித நேயத்தின் மீது நம்பிக்கையை இழக்கக் கூடாது. தொடர் முயற்சியே வெற்றியின் வழி விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது தான் காந்தியின் கூற்றும்.
உலகம் முழுவதும் அறிந்த ஒரு மனிதர் தன் வாழ்க்கையை ஒரு எளிய ஆடை மற்றும் கையில் ஒரு கம்பு மட்டும் வைத்துக்கொண்டே தனது காலத்தை கழித்தார். பொருட்களின் மீதான நம் ஆசைகளைக் கட்டுப்படுத்தி, எளிமையான வாழ்க்கையை வாழ, அவரது வாழ்க்கை நமக்கு பாடம்.
காந்தியிடம் நீங்கள் கற்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்று எண்ணமே வாழ்க்கை. மனிதன் எதனை சிந்திக்கிறானோ அதை தான் எப்போதும் செய்கிறான். ஒருவனுடைய ஆளுமையைத் தீர்மானிப்பது அவனது சிந்தனை என்றார்.
மனிதம் என்கிற புத்தகம் உண்மையானது சிறந்த எண்ணத்தை, ஆற்றலை வெளியேக் கொண்டு வருவதில் தான் உள்ளது. மனிதம் என்னும் புத்தகத்தை விடச் சிறந்த புத்தகம் வேறென்ன இருக்கமுடியும்? என்பதுதான் காந்தியின் அடிப்படை வாதம்.
அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிக்கையில், காந்தியை “மேன் ஆப் தி இயர்” என்று குறிப்பிட்டு மகாத்மா காந்தியைப் பற்றி தகவல்கள் 1930 ஆம் ஆண்டு பிரசுரம் செய்யப்பட்டது.
உலக அகிம்சை தினம் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியே உலக அகிம்சை தினமாகும். இதனை உலக ஐக்கிய நாடுகள் அமை அறிவித்துள்ளது.