உப்பு சேர்ப்பது புற்றுநோயை உருவாக்கும் என உலக சுகாதார அமைப்பு
உணவில் அதிக உப்பு சேர்ப்பது புற்றுநோயை உருவாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
” உப்பில்லா பண்டம் குப்பையிலே ” என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. உலகில் உப்பின்றி சமைக்கப்படும் உணவென்று எதுவும் இல்லை. அப்படி சமைக்கப்பட்டாலும் அது சுவைபெறாது. உப்பு சிறிது குறைவாக இருந்தாலும் மேலும் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் இன்றும் உள்ளனர்.
இந்நிலையில் சிகரெட் எப்படி புற்றுநோயை உண்டாக்குமோ அதேபோல் உப்பும் புற்றுநோயை உருவாக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
கடந்த 2017 ஆண்டில் மட்டும் உப்பை அதிகம் சாப்பிட்டதற்காக உலகம் முழுவதிலும் 30 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளப்படும் உப்பு, அப்படி என்ன செய்துவிடும் என அசால்ட்டாக இருந்து விடக்கூடாது. உப்பு உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
உப்பு பாக்கெட்டுகளில் குறிப்பிட்ட உணவு வகைகளை பட்டியலிட்டு எவ்வளவு உப்பு அளவை சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிட அறிவுறுத்தியுள்ளது.