பாலுணர்வைத் தூண்டும் வெந்தயம்
பாலுணர்வைத் தூண்டும் வெந்தயம்
நமது வீட்டிலும் மருத்துவ அறை ஒன்று காலங்காலமாக இயங்கி கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் அதை புரிந்து கொண்டு பயன்படுத்தி கொள்கிறார்கள். பலரும் அதை வெளியில் தேடிக் கொண்டிருக் கிறார்கள். அத்தகைய வீட்டுமருத்துவத்தை உங்களிடம் கொண்டு வரவே இந்த பகுதி இயங்கிகொண்டிருக்கிறது.
வெந்தயம் மசாலாக்களிலும் தாளிப்பிலும் மட்டுமல்ல வெறுமனே கூட எடுத்துகொள்ள வேண்டிய உணவு என்கிறார்கள் அன்றைய முன்னோர்களும் இன்றைய மருத்துவர்களும்
வெந்தயத்தில் என்ன இருக்கு
புரதம் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், நியாசின், இரும்புசத்து, நீர்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்பு, சோடியம், தயாமின், ரிபோப்ளேவின், நிகோடினிக் போன்றவையும் நிறைந்திருக்கின்றன. மேலும் இதில் டையோஸ் ஜெனின் என்னும் சேர்மமும் இணைந்திருப்பதால், ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஸ்டீராய்டல் சப்போனின் போன்றவற்றையும் தன் னுள் கொண்டிருக்கிறது.
நீரிழைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்
வெந்தயத்தில் அமினோ அமிலங்கள் இருப்பதால் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டி விடுகிறது. தேசிய ஊட்டச் சத்து மையம் மேற்கொண்ட ஆய்வின் படி வெந்தயம் இரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை குறைப்ப தாக கூறப்படுகின்றன.
நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வெந்தயத்தைச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு குறைபாடு கட்டுப்படும்.வெந்தயத்தை எந்த முறையில் எடுத்துக்கொண்டாலும் அதன் சத்துகள் வீணாகாது அதில் இருக்கும் நன்மைகளை அப் படியே பெறலாம்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெந்தயத்தை ஊறவைத்து முளைகட்டி சாப்பிட வேண்டும். இதனால் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
எப்படிச் சாப்பிடலாம்?
இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரைக் குடித்து விட்டு அதன் பிறகு வெந்தயத்தை நன்றாக மென்று சாப்பிடலாம். கசப்பு சுவை இருந்தாலும் ஆரோக்கியம் முக்கியமானதாயிற்றே.
வெந்தயத்தைப் மிக்ஸியில் பொடித்து காலையில் நீர் அல்லது மோரில் 2 டீஸ்பூன் சேர்த்து குடிக்கலாம். அல்லது சாப்பிடுவதற்கு அரைமணிநேரம் முன்பு எடுத்துக்கொள்ளலாம்.காய்கறி சாலட் செய்யும்போது ஊறவைத்த வெந்த யத்தைச் சேர்த்தும் சாப்பிடலாம்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வெந்தயத்தை உட்கொள்ளும் போது நீரிழிவுக்கான சிகிச்சையையும் கடை பிடிக்க வேண்டும். தொடர்ந்து வெந்தயம் பயன்படுத்தும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையலாம் என்பதால் மாதம் ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
கொழுப்பைக் குறைக்க
உடலில் தேக்கியுள்ள் அதிகப்படியான கொழுப்பை குறைக்க செய்வதில் வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது என்று ஆய் வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உடலில் உள்ளதை களைவதோடு இதயம் தொடர்பான குறைபாடுகளின் அபாயத்தையும் குறைக்கிறது. வெந்தயத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் இதயத்தைப் பாதுகாக்கிறது.
செரிமானக் கோளாறுகளா?
வயிறு வலி, வாயுத்தொல்லை, வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வெந்தயத்தை அப்படியே சாப்பிடாமல் முளைக்கட்டி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இதனால் செரிமானம் எளிதா வதுடன் உணவுகளில் இருந்து பிரிக்கப்படும் நச்சுக்களையும் வெளியேற்றும்
மாதவிடாய்க் காலத்தில் வெந்தயம்
மாதவிடாய்க் காலங்களில் அடிவயிறு வலியை அதிகமாக உணர்பவர்கள் வெந்தயத்தை மாதவிடாய் நாட்கள் வருவதற்கு முன்பு சாப்பிட்டால் வலியின் தீவிரம் குறைய தொடங்கும். உடல் உஷ்ணத்தைப் போக்குவதோடு அந்த நேரத்தில் உண்டாகும் ஒரு வித எரிச்சலையும் போக்கும்.
மலச்சிக்கல்
வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து காப்பாற்றும். சிறுநீரகத்தில் நச்சுக்களை சேர விடாது என்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பும் குறையும்.
பாலுணர்வைத் தூண்டும் வெந்தயம்
ஆண்கள் வெந்தயத்தை உட்கொண்டு வந்தால் டெஸ்டோஸ்டிரான் என்னும் ஹார்மோனின் அளவு அதிகரிக்கப்படும். இதனால் பாலுணர்வு தூண்டப்படுவதோடு உறவிலும் திருப்தி உண்டாகும்.
இவை தவிர உடல் எடை குறைப்பதிலும், தாய்ப்பால் சுரக்க செய்வதிலும் வெந்தயம் உதவிபுரிகிறது. ஆரோக்கியம் தாண்டி அழகின் ஆரோக்கியத்தையும் காக்கிறது வெந்தயம்
கூந்தல் பிரச்னைக்குத் தீர்வு
வறண்ட கூந்தல், கூந்தல் உதிர்வு, பொலிவிழந்த கூந்தல், இளநரை இப்படி கூந்தலின் வளர்ச்சியைப் பாதிக்கும் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க வெந்தயம் ஒன்றே போதுமானதாக இருக்கிறது.
வெந்தயத்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் மைய அரைத்து கூந்தலில் தேய்க்கவும். பதினைந்து நிமிடங் கள் கழித்து மிதமான வெந்நீரில் எந்தவிதமான ஷாம்புகளையும் உபயோகிக்காமல் தலையை நன்றாக நுரைக்க தேய்த்து அலசி வந்தால் நான்கு வாரங்களில் நல்ல பலன் தெரியும்.
உடல் குளுமை இருப்பவர்கள் மருத்துவர்களின் அறிவுரையோடு மாதம் ஒருமுறை செய்யலாம். வெந்தயத்தைத் தயிரில் ஊற வைத்து தேய்த்தால் கூந்தலில் இருக்கும் பொடுகு பிரச்னையும் தீரும். ஆனால் வெந்தயம், தயிர் இரண்டும் இணைந்து அதிக குளிர்ச்சியை உண்டாக்கிவிடும். அதனால் கோடைக்காலங்களில் உடல் உஷ்ணம் கொண்டிருப்பவர்கள் இதை முயற்சி செய்யலாம். மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே.
உடல் குளுமை கொண்டவர்கள் தலைக்கு ஷாம்புவைத் தவிர்த்து வெந்தயத்துடன் சம அளவு சீயக்காய் சேர்த்து, அரைத்து தலைக்கு குளித்து வந்தாலும் கூந்தல் கெட்டிப்படும். வெந்தயத்தின் வழவழப்பு கூந்தலுக்கு பொலிவைக்கொடுக்குவறண்ட முகத்தில் வளமான அழகு
சருமத்திற்கு அழகு தருவதோடு அழுக்குகளையும் நீக்கும் அற்புத குணங்களைக் கொண்டது வெந்தயம். முகத்தில் இருக் கும் பருக்கள், உஷ்ண கட்டிகள், சுருக்கங்கள், கரும்புள்ளிகள், தேமல் போன்ற அனைத்தையும் போக்கவல்லது வெந்தயம்.
பொடித்த வெந்தயத்தை பசுந்தயிரில் குழைத்து முகத்தில் மசாஜ் செய்து ஃபேஸ் பேக் போல் போடலாம். அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் நாளடவில் முகத்தில் பொலிவு கூடுவதைக் காணலாம். முகத்தின் பளபளப் பும் நிறமும் மெருகேறக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெந்தயத்தின் பலன்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆரோக்கியத்தையும் அழகையும் இயற்கையான முறையில் அதிகரிக்க கைவசம் வீட்டிலேயே வைத்திருக்கும் வெந்தயத்தைப் பயன்படுத்துங்கள்