மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தொடங்கியது வாக்குப்பதிவு..! | நா.சதீஸ்குமார்

 மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தொடங்கியது வாக்குப்பதிவு..! | நா.சதீஸ்குமார்

சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்  வாக்குப்பதிவு தொடங்கியது.

தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அக். 9 ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, நவம்பா் 7, 17, 25, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தோ்தல் நடைபெறுகிறது. 5 மாநிலங்களிலும் டிசம்பா் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

சத்தீஸ்கரில்  முதற்கட்டமாகவும், மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெறுகிறது.  மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தோ்தல் நடத்தப்படவுள்ளது.

மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு வந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...