வங்கக் கடலில் உருவானது மிதிலி புயல்!  | நா.சதீஸ்குமார்

 வங்கக் கடலில் உருவானது மிதிலி புயல்!  | நா.சதீஸ்குமார்

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தம் தற்போது புயலாக மாறியது. இதற்கு மிதிலி என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 20- ஆம் தேதிக்கு பிறகு தொடங்கியது. இது தற்போது வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய போதே அரபிக் கடலில் தேஜ் என்ற புயலும் வங்கக் கடலில் காற்றழுத்தமும் உருவானது.

தேஜ் புயலால் கேரளா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்தது. குறைந்த காற்றழுத்தத்தால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி காற்றழுத்தம் உருவானது.

இதைத் தொடர்ந்து இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த நிலையில் நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்த நிலையில் இது விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 380 கிமீ. தொலைவில் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள துறைமுகங்களில் கப்பல்கள் மற்றும் மீனவர்கள் நலன் கருதி புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. குறிப்பாக எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடலில் இன்று புயல் உருவாகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாக வலுப்பெறும். இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுவிழந்து வரும் 18ஆம் தேதி வங்கதேசத்தில் மோங்லா- கோபுபரா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் தோன்றிய முதல் புயல் என்ற பெயரை பெற்றது. மாலத்தீவின் பரிந்துரைப்படி புயலுக்கு மிதிலி என பெயர் சூட்டப்படுகிறது. இந்த புயலால் போது இன்று காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 12 மணி நேரத்திற்கு காற்றானது மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திற்கு வீசி வருகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...