தீபாவளி தொடர் விடுமுறை முன்னிட்டு இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு…

 தீபாவளி தொடர் விடுமுறை முன்னிட்டு இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு…

தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 11, 12, 13 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து பயணிகள் ரயில்கள் மூலமும் பேருந்துகளின் மூலமும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள்.

இதனால், மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை நகரப் பகுதிகளிலிருந்து செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர். இந்த நிலையில், நவ. 9, 10, 11 ஆகிய தேதிகளில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை, இன்று (9-ஆம் தேதி), நாளை (10- ஆம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (11-ஆம் தேதி) ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு இன்று (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...