நீர் முள்ளிமருத்துவ குணம்

நீர்முள்ளி லேகியம்

நீர் முள்ளி விதை – 4 பலம்

எள்ளு – 1 பலம்

கடலை மாவு – 2 பலம்

ஜாதிக்காய் – 1 விராகனிடை 

ஜாதி பட்த்திரி – 1 விராகனிடை

கிராம்பு – 1 விராகனிடை

புரசம் பிசின் – 3 விராகனிடை

நிலைக்கடம்பு – 2 விராகனிடை 

வெல்லம் – 5 பலம் 

மேற் குறிப்பிட்ட மூலிகைகளை தனித்தனியே இடித்து மெல்லிய துணியால் சலித்து சூரணித்துக் கொள்ளவும். ஒரு நன்கு முற்றின தேங்காய் ( நாட்டு மரத்து தேங்காய்) எடுத்து அடிப்பகுதியில் துளையிட்டு சூரணித்த மூலிகை பொடிகளை அதனுள் செலுத்தி அடைத்து விடவும். பின் அதற்க்கு மூன்று விரற்கடை கனத்தில் பசு மாட்டு சாணியால் கவசம் போல் செய்து வரட்டியால் புடம் போடவும். தேங்காய் வெடித்ததும் அதில் உள்ள மருந்தை எடுத்து அதனுடன் ஐந்து பலம் வெல்லம் சேர்த்து லேகியமாக்கி தினம் 2 முறை காலை மாலை கொட்டை பாக்களவு சாப்பிட்டு வர வீரி விருத்தி உண்டாகும், இடுப்பு வலி தீரும்.

நீர்முள்ளி  சூரணம்

நீர்முள்ளி சூரணம் என்பது விசேஷ குணம் கொண்டது. இதில் நீர் முள்ளி, நெருஞ்சில், சுரைக்கொடி, வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு, கொட்டை நீக்கிய கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சரகொன்றை புளி, பறங்கிச்சக்கை போன்றவை சேர்க்கப் படுகின்றன. இது நோய்களை தீர்த்து உடலுக்கு பலத்தை தரும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

பொதுவான மருத்துவ குணம்.

சிறு நீரைப் பெருக்கும். வியர்வையை மிகுவிக்கும். உடலை ஊட்டம் பெறவைக்கும். வெண் குட்டம், மேகநீர், சொறி சிரங்கு, சிறு நீர் தாரை எரிச்சல், தாதுக்கள் அழுகி விடுவதைத் தவிர்க்கும், தலைவலி, காய்ச்சல், மலச்சிக்கல் போம். குளிர்ச்சி தரும், பசியை மட்டுப் படுத்தும்.

தாய்ப்பால்

சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள்கொண்டு வரும். உடலுக்கு சக்தி அளிக்கும் மருந்துகளிலும், தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் மருந்துகளிலும் நீர்முள்ளி விதை சேர்க்கப்படுகிறது.

குருதித் தூய்மை

விதையைப் பொடித்து வேளைக்கு அரை முதல் 1 கிராம் வரை பாலில் கலந்து சாப்பிட்டு வர மேகம், வயிற்றுப் போக்கு, நீர் கோவை, இரைப்பிருமல், ஆகியவை தீரும். குருதித் தூய்மையடையும்.

ஆண்மை சக்தி பெருக

நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்

தாம்பத்திய பெருக 

நீர் முள்ளி விதை , நெரிஞ்சி முள், கோரைக்கிழங்கு, முருங்கை விதை, இந்த நான்கையும் சமஅளவு எடுத்து பொடிசெய்து கொண்டு இதை காலை இரவு என்று இரண்டு வேளையும் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு வரும் பொழுது ஒரு இனிமையான தாம்பத்தியத்தோடு மனைவி மெச்சிய மனாளனாக வாழக்கூடிய ஒரு சூழலுடன் ஆயுள் முழுக்க வாழ இயலும்.

ஆண்மை சக்தி

நீர் முள்ளி விதையுடன் முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருக தாம்பத்யத்தில் முழு பலன் கிடைக்கும். இதன் விதையைத் தனியாக அரைத்துப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும்

சப்தத்தாதுக்களும் வலுவடைய

நீர் முள்ளி விதை 40 கிராம் , நெருஞ்சில் விதை 20 கிராம் , வெள்ளரிவிதை 10 கிராம் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி, பனங்கற்கண்டு கலந்து 1 வாரம் காலை மாலை கொள்ள துர் நீர் கழியும் . நீர் எரிச்சல், மேக நீர், வாத நீர், உடல் காங்கை நீங்கிச் சப்தத்தாதுக்களும் வலுவடைந்து உடல் பலம், தாதுப் பலம் உண்டாகும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் அரை டீஸ்பூன் இதன் விதைப் பொடியை 200 மி.லி மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் குடித்து வந்தால் நோய் குணமாகும். நீர் முள்ளி விதையுடன் சம அளவு மாதுளம் விதைப் பொடி சேர்த்து ஒரு ஸ்பூன் வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகி தாம்பத்யம் சிறக்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!