வாய்ப்பு
அந்தி சாயும் நேரத்த்தில் அந்த முதியோர் இல்லத்தின் வராந்தாவில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் வயதான பாட்டிகள். மேலாளர் ரவி அங்கிருந்த பாட்டிகளைக் கணக்கெடுத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தார்.
”இன்னைக்கு கதை சொல்றது யாரு…?” கேட்டார் ரவி.
”நான்…!” குரல் தந்து விட்டு கை உயர்த்தினாள் தெய்வானைப் பாட்டி.
”ம்…சொல்லுங்க!: ரவி சொன்னதும் தொண்டையைக் கனைத்தபடி கதை சொல்ல ஆரம்பித்தாள் தெய்வானைப்பாட்டி.
”பாட்டி…நீங்க தான் அதிகமா கதை சொல்லியிருக்கீங்க, நீங்க தான் வின்னர்.!”
”எங்க கதையக் கேட்டு என்ன பண்ணப் போறீங்க…?” கேட்டாள் தெய்வானைப் பாட்டி.
”ஒரு குடும்பத்துல மூணு அண்ணன் தம்பிங்க…தனித்தனியா கட்டியிருந்த வீடுகள வித்துட்டு ஒரு இடத்துல ஒரு பெரிய வீடு கட்டி கூட்டு குடித்தனம் பண்ணப் போறாங்களாம், மொத்தம் பனிரெண்டு பேர், அதுல ஆறு குழந்தைங்க, அவங்களுக்கு தாத்தா பாட்டி கிடையாதாம், குழந்தைங்களுக்கு கதை சொல்லித்தர ஒரு பாட்டி வேணுமாம், அதுக்கு உங்கள தேர்வு பண்ணியிருக்கேன் பாட்டி…!”
”என் பேரன் பேத்திக்குத்தான் கதை சொல்லித்தர முடியல, வேற புள்ளயிங்களுக்காவது கதை சொல்லித்தர ஒரு வாய்ப்பு கிடைச்சுதே!” என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் தெய்வானைப் பாட்டி.