பிரம்ம சாபமும் கட்லெட்டும்
” பிரம்மன்விட்ட சாபத்லேர்ந்து விமோசனம் ஆறத்துக்காக சிவபெருமான் திருவோடு ஏந்தி பிக்ஷை எடுக்க ஊருக்குள்ள வர்றார். அப்ப எதிரே வந்த ஆதி சங்கரர் , ‘ இப்டிலாம் போய் கேட்டா , மக்கள் பிக்ஷை போட மாட்டாங்க.எதாவது வித்தை செஞ்சு காட்டி கேட்டாதான் மக்கள் பிக்ஷை போடுவாங்க’னு சொல்ல..
‘ என்ன வித்தை செஞ்சு காட்டனும்..?’
‘ எதாவது குரங்கை பிடிச்சு அதை வச்சு வித்தை காட்டுங்க.’
‘ என்னிடம் குரங்கு இல்லையே..’
அப்ப ஆதி சங்கரர் ,

‘ என்னிடம் உள்ள மனசை உங்களிடம் தருகிறேன்.அது அலைபாயும் மனசு.மரத்துக்கு மரம் தாவும் குரங்குகள் மாதிரி என் மனதும் அவ்வப்போது தாவுகிறது.அதனால் என் மனதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள் ‘ என்கிறார்.
யோசிச்சு பாருங்க.எப்பேர்ப்பட்ட மனிதர் நம் ஆதி சங்கரர். அவர் மனதே ஒரு நிலையில் இல்லாமல் அவ்வப்போது தாவுகிறது என்றால் சாதாரணப்பட்ட மனிதர்களான நம்ம மனசுல எத்தனை குரங்குகள வச்ருப்போம்..?”
எழுத்தாளர் + பட்டிமன்ற பேச்சாளர் + வழக்கறிஞருமான திருமதி சுமதி.
அண்டர் த ட்ரீயின் ஏழாம் ஆண்டு கதை கொண்டாட்டம் நிகழ்ச்சி நேத்து( 27 ஏப்ரல்) ஆள்வார்பேட்டை கவிக்கோ அரங்கத்ல நடந்தது.
சாயந்தரம் அஞ்சு மணிக்கு நான் அந்த அரங்கத்துக்குள்ள என்டர் ஆனப்ப..
ரம்யா வாசுதேவன் மேடம் கைநெறய ( தொடுத்த ) மல்லிப்பூவும் சிஸருமா நின்னுக்கிட்டு உள்ள வந்துட்ருக்கற லேடீஸ்ங்களுக்கு பூவை கட் பண்ணி குடுத்துட்ருக்க..
வழக்கறிஞர் சுமதி மேடம் ,

நண்பர் ஹரிஹரன் நாராயணன் + என்னையும் பார்த்துட்டு ” மேல டிஃபன் , காஃபி ரெடி.சாப்ட்டு வந்துருங்க , pls..” னு சொல்ல..
எனக்கென்னமோ அப்ப அந்த இடம் நூல் வெளியீடு நடக்கற மாதிரியே இல்லாம எதோ சொந்தங்களோட கல்யாண முஹூர்த்தத்துக்கு வந்தமாதிரியே ஃபீல் ஆச்சு..
இசைக்கவி ரமணன் சாரோட அழகான தொகுப்புரையோடு நடந்த இந்த நிகழ்ச்சில டாக்டர் சுதாசேஷய்யன் மேடத்தோட சிறப்புரை மற்றும் பலரது வாழ்த்துரைனு நிகழ்ச்சி படு ஸ்வாரஸ்யம்.
இந்த ஆறு வருட முடிவுல இதுவரை ரம்யா மேடம் 2065 கதைகள சொல்லிருக்காங்க.
இதுல எனக்கு ஒரு பெருமை என்னன்னா..
அந்த 2065 கதைகள்ல நான் எழுதிய ‘ லாக்டவுனும் அப்புசாமியும் ‘ இருக்குங்கறதுதான். தான் மட்டும் கதை சொல்லாம அடுத்தவங்களும் இப்டி சொல்ல ஆரம்பிக்கனும்ங்கறத்துக்காக + சிறுவர்களிடம் நூல் படிக்கும் ஆர்வத்த வளர்க்கனும்ங்கறத்துக்காகவும் ஸ்டோரி டெல்லல் போட்டி நடத்தி அதுல வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் மேடைல வழங்கி சிறப்பு செஞ்சாங்க , ரம்யா மேடம்.

லலிதா சஹஸ்ர நாமம் விளக்க உரை , யோகிராம் சரத்குமாரின் திவ்ய சரிதம் மற்றும் ஆல்ட் + கண்ட்ரோல் = க்ரியேட் – ங்கற மூன்று நூல்களின் வெளியீடும் நடக்க..
நிகழ்ச்சில நெறய நட்பூஸ்ங்கள சந்திச்சு பேச முடிஞ்சது. புதிய தலைமுறை ஜெயஸ்ரீ ஆனந்த் , லதா சரவணன் எழுத்தாளர் மேடம்ஸ் , ஓவியர் ஸ்யாம் , சுபா சந்திரசேகரன் சார்ஸ்னுனு பலர்.
ஜெயஸ்ரீ மேடத்துக்கிட்ட எனது சமீபத்ய ‘ கனவு தொழிற்சாலை ‘ புக்கை குடுத்தப்ப ,
‘ உங்க gpay நம்பர் சொல்லுங்க வெங்கட்ஜி.’ ன்னாங்க.
‘ அதலாம் ஒன்னும் அனுப்பாதீங்க.இது என்னோட அன்பளிப்பு ‘ னு சொன்னதுக்கு..
‘ அப்டின்னா இத மறக்காம வாங்கிக்கோங்க ‘ னு சொல்லி பைலேர்ந்து ஒரு பாக்கெட்ட எடுத்து நீட்..
அட..பாதாம் பருப் பாக்கெட்.
நிகழ்ச்சி ஆரம்பிக்றத்துக் முன்ன என்ன சாப்ட்டோம்ங்கறத சொல்லனும்ல..?
செம ஸ்வீட்டான பாதாம் ரோல்.
சூடான மசால் வடை .
செம ஹாட்டான கட்லட்.
சட்னி , சாஸ் , காஃபி.
அழைப்பு விடுத்த ரம்யா மேடத்தை நிகழ்ச்சி முடிஞ்சதும் சந்திச்சப்ப..
” சார்..உங்க FB பதிவெல்லாத்தயுமே படிச்சுட்டுதான் இருக்கேன்.இலக்கிய நிகழ்ச்சிகளோட சேர்ந்து அங்க சாப்ட்டதையும் பத்தி நீங்க விவரிச்சு எழுதறது எங்க எல்லார்க்குமே ரொம்ப பிடிச்ருக்கு.நான் மிஸ் பண்ணின நிகழ்ச்சிங்களப்பத்தி நீங்க எழுதறத படிக்றப்ப அந்தந்த நிகழ்ச்சிங்கள்ல நானுமே கலந்துக்கிட்ட உணர்வ நீங்க உங்க எழுத்ல கொண்டு வந்துடறீங்க.இன்னிக்கு சாப்ட்ட டிஃபன் பத்தி எதாவது கமெண்ட் உண்டா..?” னு கேட்டப்ப , நான் சொன்ன பதில் :
ம் , அட்டகாஷ்.
