மசால் வடையும் பீர்பாலும்
” மடிப்பாக்கம் சார்..மசால் வடையும் சூடான டீயும் வந்தாச்சு.அத முடிச்ட்டு வந்துருங்க, எழுத்தாளர் டாக்டர் கே.ஜி.ஜவஹர் சார் புல் புல் தாரா நிகழ்ச்சிய ஆரம்பிக்றத்துக்குள்ள ” னு Sruthilaya Vidyalaya பார்வதி பாலசுப்ரமணியன் மேடம் சொல்ல..
என்ன நிகழ்ச்சின்னா..
ஸ்ருதிலய இசை , நாட்டிய பள்ளியின் முதல்வரான பார்வதி மேடம் , தான் எழுதிய ‘ சின்ன சின்ன நீதிக் கதைகள் பகுதி 2 ‘ ங்கற புக் ரிலீஸ் ( ஏப்ரல் 24 , கோட்டூர்புரம் அண்ணா நூலக வளாகத்ல , நிகழ்ச்சியோட தொடக்கத்ல நடந்த்துதான் மேற்படி மசால் வட சம்பவம்.)

ஆஹா..ம.வ வாசன மூக்கை துளைக்க..
அடுத்த நிமிஷம் எங்க கைல டிஸ்போஸபிள் பேப்பர் பிளேட்ல வடை.
சூடு + மொறு மொறு.
வடைய பிச்சு சாப்டறச்ச Nr Sampath சார் ,
” மடிப்பாக்..இந்த வடை பத்தி போஸ்ட் போடுவீங்கதான..?” னு கேட்க..
அதுக்கு ,
” புக் ரிலீஸப்பத்தி கொஞ்சமா எழுதிட்டு இந்த வடையப்பத்திதான் அதிகம் எழுதுவார் ” னு விஜி R கிருஷ்ணன் மேடம் சொல்ல..
அப்ப பக்கத்ல நின்னு மசாலா டீ குடிச்சிட்ருந்த மேடம் லதா சரவணன் எழுத்தாளர் , அச்சச்சோ..நான் இந்த டீயை குடிச்சு முடியறவரைலயாவது ஜோக் அடிக்காதீங்கபா pls..டீ புடவைல சிந்திச்சுனா கஷ்ட்டம் ‘ னு சொல்ல..
வடை , டீ லபக்கல் முடிச்ட்டு புக் ரிலீஸ் நடக்கப்போற ஹாலுக்குள்ள நுழைஞ்சோம்.
ஆஹா..
TV ல சட்டசபை நிகழ்ச்சிகள பார்க்கறச்ச இருக்கற இடம் மாதிரி அந்த இடம்.ஓவல் ஷேப்ல வர்சையா அழகான நீஈஈஈஈள மேஜை.ஒவ்வொரு சீட்டுக்கும் முன்னே மைக்.அதுவும் ரிவால்விங் சீட்.
சீட்ல உட்கார்ந்துன்டு எப்டி வேணா திருப்பி ஸ்டேஜையோ மத்ததையோ லுக்கலாம்.
போய் உட்கார்ந்தோம்.
ஐவஹர் சார் புல்புல்தாராவ மீட்ட ஆரம்பிக்க..
புள்ளையார் சதுர்த்தி போது அநேகமா எல்லா கோவில்லேயும் CD / பென்ட்ரைவ் மூலமா அலற விடற பாட்டான ,
‘ கணபதியே வருவாய்..’ ங்கற கணீர் குரலுக்கு அதாரிடியான சீர்காழி பாடி பிரபலமான பாட்டை அநாயாசமா வாசிக்க ஆரம்ப்ச்சார்.
தொடர்ந்து..
ஒளி மயமான எதிர்காலம் ..
வெற்றி எட்டு திக்கும்.’ ங்கற மகாகவியோட பாடல் ,
மதுரை சோமு பாடி பிரபலமான ,
மருதமலை மாமணியே..
மலர்ந்தும் மலராத..’ வாசிச்சு முடிக்க..
ஆடியன்ஸ் பகுதில இருந்த எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் Pkp சார் ,
உன்னை ஒன்று கேட்பேன் ‘ பாட்டை வாசிக்க சொல்லி கேட்க..
அந்த பாட்டையும் இசைக்க..
அடுத்து நல்லியார் வர..
வரவேற்புரை முடிஞ்சு நிகழ்ச்சி ஆரம்பிக்க..
” மணிவாசகம் பதிப்பகம் மூலமா இந்த நூல் வெளியீடு நடக்றது எனக்கு ரொம்ப சந்தோஷம்.அந்த காலத்ல மாணவர்களுக்கான கோனார் நோட்ஸ்லாம் இந்த பதிப்பகம் போட்ருக்காங்க.அது பள்ளி மாணவர்களுக்கு ரொம்ப உதவியா இருந்தது. “

– நல்லி குப்புசாமி செட்டியார்.
” இப்பலாம் அடிக்கடி புத்தக வெளியீடு நிகழ்ச்சிகள் நடக்றத பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.அதே சமயம் அப்டி வெளியாகற நூல்கள்லாம் விற்பனை ஆகிறதாங்கறத்துக்கான சரியான பதில் என்னிடம் இல்லை. வெளியீடு நிகழ்வு நடந்த பிறகு ‘ உங்க நூலின் PDF கிடைக்குமா ? என்று கேட்பவர்கள் மீது எனக்கு கோவம் வருகிறது.
இந்த நூல் ஆசிரியர் , அக்பர் – பீர்பால் கதைகளை அழகாக மிக எளிய நடையில் குழந்தைகளும் படிக்கும் விதத்தில் அழகாக எழுதியுள்ளார்.இங்கு வந்திருக்கும் பெற்றோர்கள் இந்த நூலை வாங்கி முதலில் அவர்கள் படிக்க வேண்டும்.பிறகு குழந்தைகளை படிக்க வைத்து அவர்களிடம் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.”
– எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.
பேசிய பிரமுகர்கள் அனைவருமே நூலாசிரியை கலைமாமணி பார்வதி மேடத்தின் பன்முகத் திறமையை பற்றி பேச..
ஏற்புரையில் அனைவருக்கும் நன்றி சொல்லி நூலாசிரியை நிகழ்ச்சியை முடிக்க..
இந்த நிகழ்வில் பல நண்பர்களை சந்திக்க முடிஞ்சதுல சந்தோஷம். நிகழ்ச்சி முடிந்து கிளம்புகையில் அனைவருக்கும் டின்னர் அடங்கிய துணிப்பை வழங்கப்பட..
வூட்டுக்கு வந்து பிரிச்சு பார்த்ததுல..
மொளகாப்பொடிய எண்ணைல குழைச்சு நல்லா ஊறியிருந்த இட்லிங்க காட்சி குடுக்க..
கூடவே ஒரு வாட்டர் பாட்டில்.
இட்லி லபக்கல் முடிஞ்சப்றம் பாட்டில் தண்ணிய குடிச்ட்டு வாஷ்பேசினுக்கு போய் கை அலம்பல் சாங்கியத்த முடிச்ட்டு வர்றத்துக்குள்ள..
டைனிங் டேபிள்ல இஞ்சி , பெருங்காயத்தூள் , கொத்தமல்லி போட்டு நல்லா நீர்க்க கரைச்ச மோர் லோட்டால தரிசனம் குடுக்க.
ஆஹா..
