காதல் என்பது எதுவரை?/புத்தக விமர்சனம்
சிறுகதைகள்
எழுதியவர் : சுஸ்ரீ
பேசும் புத்தகங்கள்
காதல் என்பது எதுவரை?
சிறுகதைகள்
எழுதியவர் : சுஸ்ரீ
பேசும் புத்தகங்கள் புத்தகம்
பதிப்பு: ஆண்டு2025
பக்கங்கள்: 152
விலை : ரூ.170
மணிமேகலை பிரசுரம்
தியாகராய நகர், சென்னை.
600017
போன் நம்பர் :044-24342926,24346082,9176451934
இது ஆசிரியரின் 11 ஆவது சிறுகதைகள் தொகுப்பு
8 சிறுகதைகளும் மூன்று குறுநாவல்களும் இடம் பெற்றுள்ளது.
அட்டைப்படம் ஓவியம் ஓவியர் ஜெயராஜ். மனதை கவருகிறது
இந்நூலாசிரியரைப்பற்றி…
இந்நூலாசிரியர் “சுஸ்ரீ” என்கிற ஸ்ரீனிவாசன்

ஓய்வு பெற்ற என்ஜினியர்.,
தனித்துவமான சுறு சுறுப் பு எழுத்து நடை.
இயல்பாக எழுத்தில் நகைச்சுவை படிக்கும் போது கல்கியும் சுஜாதா வும் (என் )நினைவுக்கு வருகிறார்கள்.
பாத்திரங்களின் உரையாடல்,இயல்பாக. தவிர்த்து இருப்பது வர்ணனை.
_———–

“காதல் என்பது எது வரை?”குறு நாவல். எளிய நடை. ஒரு காதல் கதை. எதார்த்தம்
எங்கிருந்தோ வந்தாள் குறு நாவல் படிக்கும் போதே அந்த ஊர்களின் மணம். மனிதர்களின் குணாதிசயங்கள் வெளிப் பாடு. இவையெல்லாம் இந்த குறு நாவலில் சொல்லுகிறது. மிகவும் positive ending. இவருடைய அனைத்து கதைகளும் நெகடிவ் தன்மை இருக்காது
பொண்ணுக்கு தங்க மனசு…இந்த குறுநாவல் இந்த காலத்திற்கு ஏற்ப ஒரு கதை. வெளிநாட்டு வாழ்க்கை. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை எதில் போய் முடியும். அச்சுதன் அருமையான மனிதன். அர்ப்பிதா போன்று நெறய பேர் இப்போது இருக்கிறர்கள். அவர்களின் வாழ்க்கை ஒரு பொய் தான்.
எல்லோரும் படிக்க வேண்டிய கதை இது
புத்தகத்தை, கீழே வைக்க முடியாத அளவுக்கு படிக்க வேண்டும் என தோன்றும். மற்ற சிறு கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்
.
விறுவிறுப்பான, சுறுசுறுப்பான நடை
அவள் வருவாளா? எதிர்பார்க்காத முடிவு. நமக்கே அசடு வழிய தோணுது
சுய முன்னேற்றம். ஊருக்கு உபதேசம். இப்பவும் மனிதர்கள் இப்படி இருக்காங்க
கோயில் தேர். காலம் கடந்த காதல் இதை நினைவூட்டுகிறது. எனக்கும் இப்படி நேர்ந்து இருக்கு. வெள்ளை பேப்பர் சுருட்டி எடுத்து கொண்டு போவாள். நான் காத்திருப்பது தெரியும். இப்போ எங்கே இருக்கா தெரியல
பந்தா பரமசிவம்.இது போல் மனிதர் அதிகம்
பிரியாணி காதல்..வரம்பு மீறின உறவு இருந்தாலும் அவனுக்கு பிரியாணி மேல் காதல். இப்படி யும் மனிதர்கள்.
மசாஜ் பண்ணலையோ?… செம நகைச்சுவை. இன்னிக்கு வரை தெரியல முழங்கால் வலிக்கு முதுகு இடுப்பு ஏன் மசாஜ் பண்ணினானு 😄😄
பான் வாயேஜ்…வெளி நாட்டுப் பயணம் என்றால். மின்னல் வேகம். ஏதோ நடக்க போவது போன்று கொண்டு போக ஆனா ட்விஸ்ட். சார் இங்கே சுஜாதா வை பார்க்கலாம்
மாறுகின்ற மன நிலை…எதார்த்தம். மனிதர்கள் எப்பவும் ஒரே மாதிரி இல்லை. நல்ல knot இந்த கதை
எல்லா கதைகளையும் எப்பவும் நாம் படிக்கலாம். நமக்கு வேண்டிய
, காதல், யதார்த்தம். ஜோக். முதலியன இருக்கு.
முதலில் நான் சொன்னது போல் . இயல்பாக கதையை நகர்த்தி செல்வதால் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது . எழுத்துக்கள் அலட்டிக்கொள்ளவில்லை. இது போதும் வாசகர்களை கவர என உணர்ந்து இருக்கார்
இவருடைய மற்ற சிறுகதைகள் நாவல்கள் வாங்கி படிக்க வேண்டும் என எல்லோருக்கும் தோணும் என்பது உண்மை
நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களே
இவரது கதைகளில் பாத்திரங்களாக உலா வருவதால் ,நமக்கு இவரது
கதைகளில் ஒரு ஈடுபாடு ஏற்படுகிறது
அன்புடன்
உமாகாந்தன்

