உரத்த சிந்தனை மேடையில் 12 எழுத்தாளர்களுக்குப் பாராட்டு மற்றும் விருது
இரண்டு நூல்கள் வெளியீடு
உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆடிட்டர் என் ஆர் கே வின் சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உரத்த சிந்தனை சங்கத்தின் துணைத் தலைவர் ஆடிட்டர் என் ஆர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

பஹல்காம் சுற்றுலா தளத்தில் தீவிரவாதிகளால் உயிர் நீத்த இந்தியர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாம்பலம் சீதாராம் வித்யாலயா பள்ளியை சேர்ந்த மாணவிகள் பாரதியின் பாடல்களைப் பாடினர்
உரத்த சிந்தனை சங்கத்தின் மக்கள் தொடர்பாளர் திருமதி மு மனோன்மணி வரவேற்றுப் பேசினார்.
எழுத்தாளர் ஸரோஜா சகாதேவன் எழுதிய கொலுசே.. கொலுசே.. என்ற நூலை அமுதசுரபி மாத இதழின் ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட உரத்த சிந்தனை சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு உதயம் ராம் பெற்றுக்கொண்டார்.
சிறுகதை நூல்களுக்கான மதிப்புரையை எழுத்தாளர் வேதா கோபாலன் அவர்களும், கட்டுரை நூல்களுக்கான மதிப்புரையை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பொருளாளர் முனைவர் பெ.கி பிரபாகரன் அவர்களும், ஆன்மீக கட்டுரை நூல்களுக்கான மதிப்புரையை ஆன்மீக எழுத்தாளர் திரு மீ விஸ்வநாதன் அவர்களும், நாவலுக்கான மதிப்புரையை கல்கி இதழின் மேனாள் ஆசிரியர் வி எஸ் வி ரமணன் அவர்களும் கவிதை நூல்களுக்கான மதிப்புரையை கவிதை உறவு இதழின் ஆசிரியர் ஏர்வாடி எஸ் ராதாகிருஷ்ணன் அவர்களும்,சிறுவர் நூல்களுக்கான மதிப்புரையை சிறுவர் வனம் காலாண்டு இதழின் ஆசிரியர் சூடாமணி சடகோபன் அவர்களும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் உரத்த சிந்தனை பெங்களூர் கிளையின் அமைப்பாளர் துளசி பட் எழுதிய சட்டை போட்ட யானைக்குட்டி என்ற நூலும் வெளியிடப்பட்டது
சிறுகதை நூலுக்கான விருதுகள் எழுத்தாளர் இந்திரன், நீலன், சுரேஷ் மற்றும் முனைவர் பாலசாண்டில்யன் ஆகியோருக்கும், கட்டுரை நூலுக்கான விருதுகள் திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பன் மற்றும் முனைவர் பவித்ரா நந்தகுமார் அவர்களுக்கும், ஆன்மீக நூலுக்கான விருதுகள் பிரபுசங்கர் மற்றும் கவிஞர் திருவைபாபு ஆகியோருக்கும், நாவலுக்கான விருதுகள் பரிசுகள் எஸ். ராஜலட்சுமி மற்றும் வ.செ . லோகநாதன் ஆகியோருக்கும், கவிதை நூலுக்கான விருதுகள் சீ . பாஸ்கர் மற்றும் பொதிகை செல்வராஜ் ஆகியோருக்கும், சிறுவர் நூலுக்கான விருதுகள் கவிஞர் உமையவன் மற்றும் மாணவி சாதனாஸ்ரீ கௌதம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

அமுதசுரபி மாத இதழின் ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் விருதுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியினை சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் திருமதி பத்மினி பட்டாபிராமன் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் எஸ் பி முத்துராமன், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், சாய் சங்கரா பஞ்சாபகேசன், ஓவியர் ஷ்யாம், லதா சரவணன் இதய மருத்துவர் சொக்கலிங்கம் மற்றும் ஏராளமான எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஜே வி கேட்டரிங் அப்பு அவர்களின் கை மணத்தில் மதிய உணவும் சிறப்பாக அமைந்தது.
