விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் (2023)

 விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் (2023)

விநாயகரின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானின் அருள் நமக்கு கிடைப்பது போலவே அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என வாழ்த்திட, வாழ்த்துக்களை மற்றவர்களுடன் பகிர வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா என்பதே ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு விழாவாகும். அதனால் இந்த நாளில் குடும்பத்தினர் மட்டுமின்றி மற்றவர்களுடனும் சேர்ந்து இந்த விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடிட வேண்டியது அவசிய மாகும்.அனைவருக்கும் மின்கைத்தடியின் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 19 ஆகிய இரண்டு நாட்களும் கொண்டாட ஏற்றதாக அமைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மேலும் சிறப்பான விழாவாக விநாயகரின் அவதார திருநாள் அமைந்துள்ளது. அதுவும் புரட்டாசி மாதத்தில் வருவதால் ஆன்மிக அன்பர்கள் அதிக உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தயாராகி வருகின்றனர். நாமும் மற்றவர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறி இந்த நாளை சிறப்பானதாக கொண்டாடுவோம்.

ஆனை முகக் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளே விநாயகர் சதுர்த்தியாகும். விநாயகர் ஓம்காரம் என பிரணவ மந்திரத்தின் வடிவமானவர் என்பதே அவரது உருவத் தத்துவமாகும். விநாயகருக்க கணக்கில்லாமல் உலகம் முழுவதும் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அரச மரம், வன்னி மரம், குளக்கரை, ஆற்றங்கரை ஆகிய இடங்களிலும், சாலையோரங்களிலும் வீற்றிருந்து அருள் செய்யக் கூடிய கடவுள். விநாயகரை தரிசனம் செய்வதற்கு நேரம் ஒதுக்கி, கோவிலுக்கு தேடிச் சென்று வணங்க வேண்டும் என்பதில்லை என்பதால் பலரின் இஷ்ட தெய்வமாக விளங்கக் கூடியவர் விநாயகர்.

அவரின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி அன்று நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை பகிர்ந்து, அனைவரும் விநாயகரின் அருளை பெற செய்யலாம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...