விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜைக்கு உகந்த நேரம் எது

 விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜைக்கு உகந்த நேரம் எது

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜைக்கு உகந்த நேரம் எது?

10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், முக்கிய திதியான சதுர்த்தி திதி எப்போது, வீட்டில் பூஜை செய்ய உகந்த நேரம் எது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

நாடு முழுவதும் நாளை (செப்.18) முதல் விநாயகர் சதுர்த்தி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் நாளை கொண்டாடப்படுகிறது. பலருக்கு விநாயகர் ஃபேவரைட் கடவுளாக உள்ளார். மக்கள் கோயிலுக்கு சென்றும், வீடுகளில் விநாயகர் சிலை நிறுவியும் பூஜை செய்து மகிழ்வர். விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை மற்றும் பிற உணவுகளைப் படையல் இட்டு வழிபடுவர். 

அதோடு பொது இடங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆறு, குளம், கடல்களில் கரைக்கப்படும். இந்தப் பண்டிகை ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படும்.  வடமாநிலங்களில் 3 – 10 நாட்கள் வரை விசேஷமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். கணேஷ் சதுர்த்தி அல்லது கணேஷ் உத்சவ் எனக் அழைக்கப்படுகிறது. 

உகந்த நேரம் எது? 

வடமாநிலங்களில் செப்டம்பர் 19 தொடங்கி செப்டம்பர் 28 வரை 10 நாட்கள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பண்டிகையின் முக்கிய திதியான சதுர்த்தி திதி நாளை செப்டம்பர் 18-ம் தேதி அன்று நண்பகல் 12:39 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 19-ம் தேதி  மதியம் 1:43 மணிக்கு முடிகிறது. முதல் நாள் நண்பகல் தொடங்கி மறுநாள் நண்பகல் வரையில் சதுர்த்தி திதி இருப்பதால் இந்த நேரங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்ய உகந்த நேரமாக இருக்கும். 

மேலும் அதிலும் குறிப்பாக செப்டம்பர் 19-ம் தேதி  காலை 11:01 மணி முதல் மதியம் 1:28 மணி வரை பூஜை செய்ய சரியான முகூர்த்த நேரமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...