வீட்டிலேயே ஈஸியா செய்ய பிடி கொழுக்கட்டை

 வீட்டிலேயே ஈஸியா செய்ய பிடி கொழுக்கட்டை

6 பொருட்கள், இந்த அளவு போதும்: வீட்டிலேயே ஈஸியா செய்ய பிடி கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி 2023: சிம்பிள் ஈஸியான பிடி கொழுக்கட்டை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்தி நாளை (செப்.18) கொண்டாடப்பட உள்ளது. மக்கள் கோயிலுக்கு சென்றும், வீடுகளில் விநாயகர் சிலை நிறுவியும் பூஜை செய்து மகிழ்வர். விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை மற்றும் பிற உணவுகளைப் படையல் இட்டு வழிபடுவர். இந்த கொழுக்கட்டை பல விதமாக செய்யலாம்.

இனிப்பு, காரம் வைத்தும் செய்யலாம். பலரும் கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் எப்படி செய்வது என்று தெரியாமல் இருப்போம். இங்கு எளிமையாக பிடி கொழுக்கட்டை செய்வது குறித்துப்  பார்ப்போம். 

தேவையான அளவு 

அரிசி மாவு – 1/2 கப்

வெல்லம் – 1/4 கப்

தண்ணீர் – 1 1/4 கப்

துருவிய தேங்காய் – 1/4 கப்

ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்

எண்ணெய் – சிறிதளவு 

செய்முறை

முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி வெல்லத்தை தட்டிப் போடவும். வெல்லம் கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டி, ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். இப்போது பாகு பதத்திற்கு வரும். அப்போது அதில் ஏலக்காய்ப் பொடி, தேங்காய் தூவி விடவும். 

அடுத்து தீயைக் குறைத்து, அதில் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி வராதவாறு கிளறி விட வேண்டும். ஒரு கட்டத்தில் மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வேளையில் அடுப்பை அணைத்து, குளிர வைக்க வேண்டும். மாவு வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு, அந்த மாவை எடுத்து, கொழுக்கட்டை  செய்யத் தேவையான வடிவத்தில் பிடிக்கவும். 

இப்போது அதை  இட்லித் தட்டில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான இனிப்பான பிடி கொழுக்கட்டை ரெடி.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...