‘ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தில் நடிகர் சூர்யா பைக்

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏவி.எம். ஸ்டுடியோஸ் சமீபத்தில் ‘ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியம்’ மூலம் தங்கள் கிரீடத்தில் இன்னொரு வைரத்தைப் பதித்துள்ளது. இது பாரம்பரியம், சினிமா வரலாறு மற்றும் அன்பே வா, பாயும் புலி, சகலகலா வல்லவன், எஜமான், சிவாஜி போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தொகுப்புகளில் இருந்து கவனமாகப் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களின் கொண்டாட்டமாகும். இந்த வகையில், ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் சமீபத்திய செற்கையாக அயன் படத்தில் சூரியா உபயோகித்த டி.வி.எஸ். அப்பச்சி மோட்டார் சைக்கிள் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக ‘இளைய திலகம்’ பிரபு, ஆகாஷ்தீப் சைகல், ஜெகன், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் படத்திற்கு மற்றொரு சிறந்த சேர்க்கையாக அமைந்தது. நட்சத்திர நடிகர்கள், அற்புதமான காட்சிகள் மற்றும் சார்ட்பஸ்டர் பாடல்கள் தவிர, ‘அயன்’ தமிழ் சினிமாவில் 2009இன் தனி பிளாக்பஸ்டர் என்ற சாதனையையும், மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் கொண்டுள்ளது. கோலாலம்பூர், போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, மலேசியா, சான்சிபார் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற கவர்ச்சியான இடங்களில் படமாக்கப்பட்டது. ‘ஓயாயியே’ பாடல் உட்பட பல காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட TVS Apache RTR 160 4V பைக், நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு மியூசியத்தில் லேட்டஸ்ட்டாக வரவுள்ளது. இந்த பைக் நாளை முதல் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக்க காட்சிக்கு வைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!