ஜூஸூடன் “இதை” மட்டும் சேர்த்து பாருங்களேன்.. “உடல் எடை” அசால்ட்டா குறையுதாம்

ஜூஸூடன் “இதை” மட்டும் சேர்த்து பாருங்களேன்.. “உடல் எடை” அசால்ட்டா குறையுதாம்

உடல்எடையை குறைக்க இந்த 2 ஜூஸ் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.. ஆனால், தவறாமல், சரியான அளவில் உள்கொள்வதால், நல்ல பலன் கிடைக்குமாம்.

உடல்எடை குறைய ஜூஸ் என்றால், எலுமிச்சம்தான் நினைவுக்கு வரும்.. எலுமிச்சையில் உள்ள மருத்துவ குணங்களை லிஸ்ட் போட்டு சொல்ல முடியாது.. தினமும் எலுமிச்சை எடுத்துக்கொண்டாலும் நல்லதுதான்.

அதேசமயம், கொய்யாவை மறந்துவிடக்கூடாது.. மிக குறைந்த கலோரி கொண்ட பழம் இது.. ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாமல், ரத்தத்தின் அளவை கட்டுப்படுத்தும்… நிறைய நிறைய நார்ச்சத்து கொண்டது இந்த பழம்.. செரிமானத்தை தாமதப்படுத்தி பசி உணர்வை தாமதமாக்கும்… தினமும் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.. உடல் எடையை குறைப்பதற்கும் இந்த கொய்யா உதவுகிறது.

நார்ச்சத்து: நார்ச்சத்து மட்டுமன்றி புரோட்டீன், வைட்டமின்கள் , மினரல்களும் நிறைவாக இருப்பதால் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கவும் உதவும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் அதிகரிக்கும்.. கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு 2 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். அடுத்ததாக அவகேடோ ஜூஸ் நிறைய எடுத்துக் கொள்ளலாம்.. நிறைய பேர் உடல் எடையை குறைக்க நினைக்கும்போது அவகேடோ சாப்பிடக்கூடாது என்ற தவறான கருத்தை கொண்டுள்ளார்களாம்.. ஆனால் உண்மையில் இந்த பழம் மிகவும் நல்லது என்கிறார்கள்.. சராசரியாக, தங்களது உணவில் அவகடோ பழங்களை சேர்த்துக்கொள்பவர்கள், 3.5 கிலோ வரை எடையை எளிதில் குறைக்கலாம் என்று அமெரிக்கப் பேராசிரியர்கள் குழுவானது, சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளையும் வெளியிட்டிருந்தது.

கொழுப்புகள்: சராசரியாக, தங்களது உணவில் அவகடோ பழங்களை சேர்த்துக் கொள்பவர்கள், 3.5 கிலோ வரை எடையை எளிதில் குறைக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. அவகடோ பழங்களை சாப்பிடுவோரின் இடுப்பு சுற்றளவும் 1.2 இன்ச் அளவுக்கு குறைந்துவிடுகிறதாம்..

இந்த பழங்களை சாப்பிடுவதால், உடல் எடை குறைந்து, தேவையற்ற சதை குறைந்துவிடும் என்று சொல்கிறார்கள்.. அதிலும் அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை மளமளவென குறைந்துவிடுமாம்.. மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இது உடலில் உள்ள கலோரிகளையும் எரித்துவிடக்கூடியது

Read more at: https://tamil.oneindia.com/health/health-awareness-and-do-you-know-what-are-the-healthy-way-to-reduce-the-body-weight-518574.html?story=1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!