ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
தமிழ்த் திரையுலகில் 55 வருடத் திரையுலகப் பயணத்தில் 250 படங்களுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் கதாசிரியரும் இயக்குனருமான வி.சி.குகநாதன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரின் படங்களுக்குக் கதாசிரியராகப் பணியாற்றியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இரண்டு வெற்றிப் படங்கள் உட்பட கிட்டத்தட்ட 25 படங்கள் வரை இயக்கியவர்
தற்போது சினி கம்பைன்ஸ் சார்பில் ஆரூரான் தயாரிப்பில் உருவாகும் ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்கிற படத்திற்கு கதை எழுதியுள்ளார் வி.சி குகநாதன். இந்தப் படத்தைப் பல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணி திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ராம்சுந்தர், பிரியங்கா இருவரும் நாயகன் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் நகைச்சுவை யோகிபாபு, மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதுடன் 11 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை கணேசனும் படத்தொகுப்பை ராஜ் கீர்த்தியும் மேற்கொண்டுள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதை பற்றி கதாசிரியரும் இயக்குநருமான வி.சி.குகநாதன் கூறும்போது, “இது நான் கதை எழுதும் 275வது படம். என்னுடைய 55 வருடத் திரையுலக அனுபவத்தில் ஒவ்வொரு படத்திலும் புதிது புதிதாக ஏதாவது ஒரு விஷயத்தை முயற்சிப்பேன். அந்த வகையில் காமெடி கலந்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கி உள்ளேன்.
நகரத்தில் மையப்பகுதியில் மூன்று சடலங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. கடத்தல், ரவுடியிசம் என அராஜகம் பண்ணிய இவர்களைக் கொன்றது யார் என போலீஸ் தீவிரமாக விசாரிக்கிறது. மருத்துவப் பரிசோதனையில் கூட இவர்கள் கொல்லப்பட்டார்களா, தற்கொலை செய்து கொண்டார்களா என்கிற உறுதியான முடிவு தெரியாத நிலையில் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க திணறுகின்றனர். அந்தப் பகுதியில் பாபா கேபிள் டி.வி.யில் புலனாய்வு பத்திரிகையாளராகப் பணியாற்றும் அதிசயா என்கிற இளம்பெண், போலீசாரே கண்டுபிடிக்கத் திணறும் இந்த மூன்று கொலைகளைச் செய்தது யார் என்று நான் கண்டுபிடித்து மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்துவேன் எனச் சவால் விடுகிறார்.
இந்த இரண்டு தரப்பில் யார் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் கதை. இதை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறேன். தற்போது இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த டிரைலரைப் பார்த்துவிட்டு ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக இருக்கு என்று பாராட்டி உள்ளார்” என்று கூறியுள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர்கள்:
அமன்
பிரியங்கா
ரித்திகா
யோகி பாபு
தம்பி ராமையா
நான் கடவுள் ராஜேந்திரன்
இம்மண் அண்ணாச்சி
தொழில்நுட்ப கலைஞர்கள்:
வசனம் & இயக்கம் – தமிழ்மணி
தயாரிப்பு- ஆரூரன், ஜெயா குகநாதன்
கதை – வி.சி.குகநாதன்
இசை – ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு – கணேஷ்
படத்தொகுப்பு – ராஜகீர்த்தி
பாடலாசிரியர் – கிருத்திகா , ஜீவன் மயில்
நடனம் – சிவ சங்கர், ‘ராஜ்’ சங்கர்
சண்டை – சூப்பர் சுப்பராயன்
தயாரிப்பு நிர்வாகி – பி.என்.சுவாமிநாதன்
மக்கள் தொடர்பு – விஜய முரளி, ரியாஸ் K அஹ்மத்