நேருவுக்கு வழங்கிய ‘செங்கோல்’ யாருடையது?
நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ‘செங்கோல்’ சோழ மன்னர்கள் பயன்படுத்தியது என்று செல்லப்படுவது தவறு. அது இன்றைய திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள படைவீட்டைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்ட ‘சம்புவராய மன்னர்கள்’ பயன்படுத்திய செங்கோலின் அடையாளம். அவர்களின் ஆட்சிக்காலம் கி.பி. 1350 முதல் 1550 வரை.
ஏனென்றால் சம்புவராய மன்னர்களின் சின்னம்தான் காளை. அதாவது நந்தி. சம்புவராயர்கள் சுமார் 200 ஆண்டுகள் வடதமிழ்நாடு எனப்படும் தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள். அதன் பிறகுதான் விஜயநகர வம்சம், இஸ்லாமியர்கள், மராத்தியர்கள் போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். எனவே தமிழ்நாட்டை ஆண்ட கடைசி தமிழ் ஆட்சி சம்புவராயர்கள் ஆட்சி.
தொண்டை மண்டல ஆட்சியாளர்களான சம்புவராயார்கள் சின்னம் காளை என்பதால்தான் தொண்டை மண்டல ஆதீனமான திருவாவடுதுறை ஆதீனம் காளை சின்னம் பொறித்த செங்கோலை நேருவுக்குக் கொடுத்தார் என்பதும் உண்மை.
‘வென்று மண் கொண்டான்’ என்ற மன்னன் சம்புவராய வம்சத்தின் முக்கிய பேரராசனாகத் திகழ்ந்தவன். அவருடைய ஆட்சியில் நந்தி சின்னம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டன. அவர்களுடைய கையில் இருந்த செங்கோலில்தான் நந்தி சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது.
சோழ மன்னர்களை முன்மாதிரியாகக் கொண்டு செங்கோல் செய்யப்பட்டு இருந்தால் அதன் உச்சியில் அவர்களின் இலட்சினையான புலிச் சின்னந்தானே இருக்க வேண்டும்? எனவே திருவாவடுதுறை ஆதீனம் சொல்லி சென்னை உம்மிடி பங்காரு குழுமம் செய்து கொடுத்த செங்கோல் சம்புவராயர் ஆட்சியின் அடையாளம். அதுவே தமிழ்நாட்டின் அடையாளம்.
எழுத்தாளர் தமிழ்மகன் எழுதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘படை வீடு’ நாவலில் இது பற்றிய விரிவான தகவல்கள் இடம் பெற்று உள்ளன.
இன்றைய சமூக சீர்கேட்டுக்கெல்லாம் எதோ ஓர் இடத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்க வேண்டும். இந்த நாவல் அதைத் தேடிய பயணம்தான். 14 ஆம் நூற்றாண்டில் தமிழ் பேரரசுக்கு சமயம், பண்பாடு இரண்டிலும் ஒரு நெருக்குதல் ஏற்பட்டது. மதுரையை ஆண்ட சுல்தானியர்களும் விஜயநகரத்தை ஆண்ட ஹரிகர புக்கர் அரசும் உண்டாக்கிய நெருக்கடியின் வலி இன்றும் தொடர்கிறது. விமர்சனக் களம் கொண்ட இந்த நாவலும் விமர்சனத்துக்குத் தப்பாது என்பது கண்கூடு. சமயம், சாதி தொடர்பான பல கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியாகவும் இந்த நாவலைப் படைத்திருக்கிறார் தமிழ்மகன்.
சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் நீண்ட நெடிய ஆட்சி பதின்மூன்றாம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது. பதினான்காம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த ஒரே தமிழ்ப் பேரரசு சம்புவராயர்களுடையது. ஒரு பக்கம் சுல்தானியர்கள், மறுபக்கம் விஜயநகரப் பேரரசு.
மின்னங்காடி வெளியீடு
பக்கங்கள்: 556
விலை: ரூ. 600.00
தள்ளுபடி விலை: ரூ. 560.00
அழைக்க கைபேசி : 7824049160