சிவகங்கையின் வீரமங்கை | 25 | ஜெயஸ்ரீ அனந்த்

 சிவகங்கையின் வீரமங்கை | 25 | ஜெயஸ்ரீ அனந்த்

வெற்றிவேல் வீரவேல்…. என்ற கோஷம் எழுப்பியபடி வீரர்கள் பல்லக்கை சுற்றி அரணாக நின்றார்கள். சில வீரர்கள் தங்களிடமிருந்த வாளை சிகப்பிமீது எரிந்து அவளை கொல்ல முற்ப்பட்டனர். அவள் அதை சாதுர்யமாக தடுத்தாள். பழக்கப்பட்ட கைகள் சுலபமாக எதிரிகளின் வாள்களையும் வேள்களையும் தடுத்தது. இருப்பினும் ஒரு சந்தர்பத்தில் அவள் கைகளிலிருந்த வாள் நழுவி கீழே விழுந்தது.

‘பிடியுங்கள் இவளை … ‘ என்ற படி வீரர்கள் அவளின் மீது பாய்ந்தனர். அவர்களை எல்லாம் கணப்பொழுதில் சூறாவளியைப்போல் சூழன்று தடுத்தவள்,  “அரசரைக் காப்பாற்றுங்கள்… துரோகி அதோ அங்கிருக்கிறான்.” என்றவள் தனது இடையினிலிருந்த வளரியை எடுத்து சுழற்றி எறிந்தாள். அது நேராக சிவகொழுந்தின் கழுத்தை பதம் பார்த்தது. இவ்விடைப்பட்ட நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட சிவகொழுந்து தான் மறைத்து வைத்திருந்த கட்டாரியால் அரசர் சசிவர்ணத்தேவரைக் கொன்றான்.  ஒரேநேரத்தில் மன்னரும் அவனும் மண்ணில் சாய்ந்தனர்.

சற்று நேரம் அனைவரும் அங்கு ஸ்தம்பித்துப் போயினர். வீரர்களுக்கு என்ன அங்கு நடந்தது என்பதை அறிந்து கொள்ளப் பல நாழிகை ஆனது. ‘ஆ….’  ‘ஐய்யோ…’ ‘ஈஸ்வரா…’ என்ற பல குரல்கள் ஒரே சமயத்தில் அங்கு ஒலித்தன. 

“ஐயோ… மாமா…” என்ற குரல் அதிர குயிலி அப்பல்லக்கை நோக்கிப் பாய்ந்தாள். சுமனும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இத்தகைய செயல்களைத் தடுக்க முடியாமல் போனதை நினைத்து வெட்கி தலைகுனிந்து கொண்டான்.

“இளவரசருக்கு நான்என்ன பதில் சொல்வேன்? பெண் மோகத்தால் என் அறிவை இழந்தேனே? ” என்று நினைத்தவன், தனது கையில் உள்ள வாளைக் கீழே எறிந்து அவசரமாக பக்கத்தில் சரிந்து இருந்த அரசரைத் தூக்கி தன் மடியில் கிடத்திக் கொண்டான். வளமான கத்தி அவர் கழுத்தை பதம் பார்த்து இருந்தது. அதைத் தனது கரத்தால் வெளியில் எடுத்தான் குருதி குபுக் என்று சீறி அவனது முகத்தை நனைத்தது.

“மாமா… மாமா…” என்று குயிலி அவரை எழுப்பி பார்த்தாள். ஆனால் அவரது கண்கள் கடைசியாக குயிலின் முகத்தை உற்று நோக்கியபடி  நிலைத்திருந்தது. அந்தப் பார்வையில் ஒரு  திருப்தி தெரிந்தது.

சற்றைக் கெல்லாம் அரசர் மாண்ட செய்தி பிரான் மலையை மட்டும் அல்லாது அந்நாடு முழுக்க பரவியது. மக்கள் தங்களது சந்தோஷத்தை முழுவதுமாக அனுபவத்தை முடிப்பதற்குள்ளாகவே துக்க சம்பவம் நிகழ்ந்து விட்டதை எண்ணித் துயருற்றனர்.

” நண்பா….” என்ற குரல் நடுக்கத்துடன் அரசர் முத்துவடுகநாதர் , கூனிகுறுகி நின்றுகொண்டிருந்த நண்பன் சுமத்திரனிடம் வந்தார்.

“என்னை மன்னித்து விடுங்கள் அரசே…” என்றவன் அரசரின் பாதங்களில்  நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான்.

–வீரமங்கை வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...