தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ பட பூஜை!

 தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ பட பூஜை!

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவா கும் ‘கேப்டன் மில்லர்’  திரைப்பட  பூஜை சென்னையில் நடைபெற்றது.

‘கேப்டன் மில்லர்’  படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ திரையுலகில் பெரிய அலையை ஏற்படுத்தியது. இந்நிலையில்  திரையுலகப் பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள, பூஜையுடன் இன்று (செப்22) தொடங்கியது.  இப்படத்தின் படப் பிடிப்பு குறித்தான அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.

‘கேப்டன் மில்லர்’ 1930-40 காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படம். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி களில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.

‘கேப்டன் மில்லர்’  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங் குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக் கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். பெரும் பாராட்டுகளைக் குவித்த ராக்கி, சாணிகாயிதம் படங்கள் மூலம் புகழ்பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கு கிறார்.

கதாநாயகனாக தனுஷ் நடிக்க, கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத் தில் நடிக்கின்றார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, மதன் கார்க்கி வசனம் எழுத, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் நாகூரன் செய்கிறார். கலை T. ராமலிங்கம், ஆடை வடிவமைப்பு பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம், ஆக்சன் திலீப் சுப்பராயன், பப்ளிசிட்டி டிசைனிங் ட்யூனி ஜான் 24am ஆகியோர் பணியாற்றுகின்றனர்.


மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...