கன்னட நடிகர் தர்ஷன் – நடிகை மாலாஸ்ரீயின் மகள் ராதனா ராம் நடிக்கும் படத்தை ஸ்ரீரவிரங்கர் தொடங்கி வைத்தார்
மறைந்த பிரபல கன்னடத் தயாரிப்பாளர் ராமு மற்றும் பிரபல சீனியர் நடிகை மாலாஸ்ரீ ஆகியோரின் மகள் ராதனா ராம். இவர் கன்னடத் திரையுலகின் சேலஞ் சிங் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் தர்ஷன் ஜோடியாக அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்திற்கு ‘D56’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. பெங்களூரு வில் உள்ள ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் ஆசிரமத்தில் வரலட்சுமி பண்டிகை நன்னாளில் படத்தின் பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நேரில் கலந்துகொண்ட ஸ்ரீ ரவிசங்கர் குருஜி கேமராவை சுவிட்ச் ஆன் செய்து முதல் ஷாட்டை தொடங்கி வைத்தார். ராக்லைன் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். ராபர்ட் பட புகழ் தருண் சுதிர் எழுதி இயக்குகிறார்.
தர்ஷன் நடிப்பில் தயாராகும் இந்த ‘D56’ ஆக்சன், பொழுதுபோக்கு இரண்டும் கலந்த அதே சமயம் சமூகத்திற்கு ஒரு கருத்தை சொல்லும் படமாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பெங்களூருவில் பிரத்யேகமாக உரு வாக்கப்பட்டுள்ள அரங்குகளில் நடைபெற இருக்கிறது. ராபர்ட் படத்திற்கு ஒளிப் பதிவு செய்த ஒளிப்பதிவாளர் சுதாகர் ராஜ், படத்தொகுப்பாளர் கே.எம். பிரகாஷ் உள்ளிட்ட தொழிநுட்பக் குழுவினர் இந்தப் படத்திலும் இணைந்து பணியாற்ற இருக்கின்றனர்.
இந்த நிகழ்வின்போது பேசிய சீனியர் நடிகை மாலாஸ்ரீ, “கன்னடத் திரை உலகில் முதன்முதலாக அறிமுகமாகும் எனது மகள் ராதனா ராமுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் மீடியாக்களும் தங்களது வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களை யும் அளிக்க வேண்டும். ராக்லைன் வெங்கடேஷ் என்னுடைய படம் மூலமாகத் தயாரிப்பு துறையில் நுழைந்தார். இன்று எனது மகள் அவருடைய தயாரிப்பு நிறுவனம் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆகிறார். அவர் ஒரு நல்ல குழுவுடன் இணைந்து அறிமுகமாவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
அவர் மிகச் சிறிய வயதிலேயே நடிகையாக வேண்டும் என விரும்பினார். அதற்காக மும்பையில் நடிப்பு மற்றும் நடனத்திற்காகப் பயிற்சி எடுத்துக்கொண் டார். உண்மையிலேயே கடந்த சில வருடங்களாக அவர் கடினமாக உழைத்தார். அவர் என்னுடைய மகள் என அடையாளப்படுத்தப்படாமல், தனக்கான ஒரு பாதையை தானாகவே தேர்ந்தெடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என கூறினார்.
ராதனா ராம் பேசும்போது, “சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷனுடன் இணைந்து நான் அறிமுகமாவது திரில்லிங்காக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக எனக்கு வாய்ப்பு வந்தபோது நிச்சயமாக என்னாலேயே நம்ப முடியவில்லை. நான் ஒரு நடிகையாக வேண்டும் என்று தான் விரும்பினேன். அதனால் திரையில் என்னை வெளிப்படுத்துவதற்காக கடந்த சில வருடங்களாக நிறைய பயிற்சி களைப் பெற்று தயாராகி உள்ளேன். என்னுடைய பெற்றோரைப்போல ரசிகர் களும் என்னை ஆசிர்வதிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்