“ஓவியத்துறையில் சாதிக்கலாம்” -பிரபல கார்ட்டூனிஸ்ட் பிள்ளை உறுதி

 “ஓவியத்துறையில் சாதிக்கலாம்”  -பிரபல கார்ட்டூனிஸ்ட் பிள்ளை உறுதி

ஓவியம் வரையத் தெரிந்த குழந்தைகளுக்கு மட்டுமே ஓவியப் பயிற்சியை ஊக்குவிக்கலாம் என்ற பொது நம்பிக்கை பள்ளிகளிலும் பெற்றோர்களிடமும் இன்னும் நிலவுகிறது. ஆனால், ஓவியப் பயிற்சி என்பது கூர்ந்து கவனித்தல், அறிவுசார் நடத்தை, ஒருமுகப்படுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும்.

அதனால் எல்லாக் குழந்தைகளையும் ஓவியம் வரைதலில் ஊக்குவிக்கவேண் டும் என்கிற கருத்தை முன்வைத்து போரூரில் பிரபலமான கிரேட்டிவ் கிட்ஸ் அகாடமி சென்னை, கெருகம்பாக்கத்தில் தனது மூன்றாவது கிளை திறப்பை ஒட்டி ஓவியப்போட்டி மற்றும் ஓவியக் கண்காட்சியை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

சிறப்பு விருந்தினர்களாக கார்ட்டூன் ஓவியர்கள் பிள்ளை மற்றும் ராம்கி ஆகி யோர் ஓவியக் கண்காட்சியைத் திறந்துவைத்து சிறப்பித்தார்கள். ஓவியப் போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கும், கண்காட்சியில் கலந்துகொண்டவர்களுக்கும் சான்றிதழ், பரிசுக் கோப்பை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கிக் கௌரவித் தார்கள்.

ஓவியர் பிள்ளை பேசும்போது, “குழந்தைகள் இளம் பருவத்திலேயே ஓவியக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். பல பிரிவுகள் ஓவியத் துறையில்  இருக் கிறது. தனக்குப் பிடித்த பிரிவைத் தேர்வு செய்து தொடர்ந்து ஓவியம் வரைந்து வரவேண்டும். அத்துடன் புதிய டெக்னாலஜியையும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஓவியத் துறையில் பிரகாசிக்க முடியும்.

இன்றைய நவீன உலகில் ஓவியத்துறையிலும், அனிமேஷன் துறையிலும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. நன்றாகச் சம்பாதிக்கலாம்” என்று ஊக்கப்படுத்தி னார்.

கெருகம்பாக்க ஊராட்சித் தலைவர் சுந்தரேசன் அகாடெமியைத் திறந்து வைத் தார். ஓமேகா பள்ளி, ஸ்பெஷல் கல்விப் பிரிவின் தலைவி ப்ரீத்தி வெங்கடேஷ் குத்துவிளக்கேற்றி சிறப்புரை ஆற்றினார்.

சுரேந்தர், அகாடமியின்  நிறுவனர் மற்றும் கிளை நிர்வாகி சத்யா அனைவரையும் வரவேற்றார்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...