அமலா பாலின் ‘கடாவர்’ பட டிரைலர் வெளியீடு

 அமலா பாலின் ‘கடாவர்’ பட டிரைலர் வெளியீடு

அமலா பால், சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதோடு ‘அமலா பால் புரொடக்ஸன்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக ‘கடாவர்’ படத்தைத் தயாரித்து அதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த ‘கடாவர்’ எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட் டல் தளத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

இதனை மோகன்லால் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். டாக்டர் ரத்னா தங்க வேலு என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் சர்ஜண்டாக வரும் அமலாபால் ஒரு கொலை வழக்கை கையில் எடுக்கிறார். பின்பு அந்தக் கொலை யாளியை எப்படி கண்டுபிடித்தார் என்பதை சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லிங் குடன் சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது இந்த ட்ரைலர்.

‘கடாவர்’ படத்தின் டிரைலர் வெளியான குறுகிய காலக்கட்டத்திலேயே லட்சக்கணக்கானப் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, சாதனைப் படைத்திருக்கிறது. இந்நிலையில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களி டத்தில் அதிகரித்திருக்கிறது.

கடாவர்- முதுகுத்தண்டை சில்லிடச் செய்து, ரத்தத்தை உறையச் செய்யும் மெடிக்கல் க்ரைம் திரில்லர் திரைப்படம். கொலை வழக்கு ஒன்றினை போலீஸ் உயரதிகாரி விஷால், தனது தலைமையில் விசாரணையைத் நடத்துகிறார்.. இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத் திரத்தில் நடிகை அமலா பால் நடிக்கிறார். மர்மமான முறையில் கொலை கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடய வியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலை காரனையும் கண்டறிகிறார்.

மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக் கும் புதிய திரைப்படம் ‘கடாவர்’. இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...