செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு ஆழ்கடலில் செஸ் விளையாடி வரவேற்பு

 செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு ஆழ்கடலில் செஸ் விளையாடி வரவேற்பு

சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022’யில் செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில் தம்பி உடை அணிந்து, கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நம்ம சென்னை பேனருடன், செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்து வாழ்த்துக்கூறியிருக்கிறார் கடல் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் S.B. அரவிந்த் தருண்ஸ்ரீ. இவர் புதுமையாக கடலுக்குள் முதன்முறையாக செஸ் விளையாட்டை நடத்திய இடம் சென்னை நீலாங்கரை.

அரவிந்த் தருண்ஸ்ரீ சிறந்த ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர். ஆழ்கடல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காகப் பத்தாண்டுகளுக்கு முள் ஆழ்கடலில் உடற்பயிற்சி, ஆழ்கட லில் சைக்கிள் ஓட்டுவது என்று சாகசங்கள் செய்துள்ளார். கடந்த 16 வருடங் களாக சுதந்திர தினத்தன்று ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏற்றி வருகிறார். இதுவரைக்கும் 15 ஆயிரம் கிலோவுக்கு மேல் ஆழ்கடலிலிருந்து பிளாஷ்டிக் கழிவுகளை அகற்றியிருக்கிறார்.

இவர் ஆழ்கடலில் ஆய்வு செய்பவர்களுக்குப் பயிற்சி வழங்கும் ஸ்கூபா டைவிங் ஸ்கூலை புதுச்சேரியில் நடத்தி வருகிறார். “ஆர்வத்திடன் வரும் இளம் பருவத் தினருக்கும் இளைஞர்களுக்கும ஸ்கூபா டைவிங் பயிற்சி தரத் தயாராக இருக் கிறேன்” என்றார். என்நோக்கம் ஆழ்கடலைல மாசு இல்லாமல் காக்க வேண்டும் என்பதுதான்” என்றார் அரவிந்த் தருண்ஸ்ரீ.

இவரது எட்டு வயது மகள் தாரகை ஆராதனாவும் இளம் வயது சூழலியலாளர். இவர் கடலைப் பாதுகாக்கவேண்டும் என்கிற எண்ணம் அனைவருக்கும வரவேண்டும் என்கிற நோக்கத்துக்காக கடந்த ஆண்டு கோவளம் முதல் நீலாங்கரை வரை உள்ள 18 கி.மீ. தொலைவை 6 மணி 14 நிமிடங்களில் நீந்திக் கடந்து அசிசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்சில் இடம் பிடித்து சாதனை படைத் திருக்கிறார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *