ஜூன் 12-ல் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடக்கம் | போட்டி அட்டவணை

துபாய்: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்​கிலாந்து மற்​றும் வேல்ஸ் நாட்​டில் நடை​பெறுகிறது. இம்​முறை 12 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 2 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன.

குரூப் 1-ல் ஆஸ்​திரேலி​யா, தென் ஆப்​பிரிக்​கா, இந்​தி​யா, பாகிஸ்​தான், வங்​கதேசம், நெதர்​லாந்து அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. குரூப் 2-ல் நடப்பு சாம்​பிய​னான நியூஸிலாந்​து, மேற்கு இந்​தி​யத் தீவு​கள், இங்​கிலாந்​து, இலங்​கை, அயர்​லாந்​து, ஸ்காட்​லாந்து அணி​கள் இடம் பெற்​றுள்​ளன.

வங்​கதேசம், அயர்​லாந்​து, ஸ்காட்​லாந்​து, நெதர்​லாந்து ஆகிய 4 அணி​களும் தகுதி சுற்​றின் வாயி​லாக பிர​தான சுற்​றில் நுழைந்​துள்​ளன. இதில் நெதர்​லாந்து அணி முதன்​முறை​யாக டி 20 உலகக் கோப்​பை​யில் களமிறங்க உள்​ளது. 24 நாட்​கள் நடை​பெறும் இந்​தத் தொடரில் மொத்​தம் 33 ஆட்​டங்​கள் நடத்​தப்பட உள்​ளன.

இந்த போட்​டிக்​கான அட்​ட​வணையை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. தொடக்க ஆட்​டத்​தில் ஜூன் 12-ம் தேதி இங்​கிலாந்து – இலங்கை அணி​கள் மோதுகின்​றன. நடப்பு சாம்​பிய​னான நியூஸிலாந்து 13-ம் தேதி மேற்கு இந்​தி​யத் தீவு​களு​டன் மோதுகிறது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்தில் 14-ம் தேதி பாகிஸ்​தானுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!