ஆகஸ்ட் 2 பாபங்களைப் போக்கும் கருட பஞ்சமி வழிபாடு
நாம் வாழும் உலகம் பூலோகம். பூலோகத்துக்குக் கீழே இருப்பதுதான் நாக லோகம். பூமிக்குக் கீழே இருக்கும் நாகலோகத்திலுள்ள நாகங்களுக்குப் பால் விடுவதும் ஆராதிப்பதும் முக்கிய தோஷங்களையெல்லாம் போக்கும் என்கிறது சாஸ்திரம். அதேபோல் நம் தலைக்கு மேலே இருப்பது ஆகாயம். அந்த வானத் தில் பறப்பது கருடர். பறவைகளின் ராஜா கருடர்தான். விஷ்ணுவின் ஆசி பெற்ற வர். ராயாணத்தில் ராமனின் ஆசி பெற்றவர் ஜடாயு ஒரு கருடர்.
ஆடி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாளில் வருவது நாக சதுர்த்தி. ஆகஸ்ட் 1ம் தேதி திங்கட்கிழமை நாக சதுர்த்தி. இந்தநாளில், நாகர் வழிபாடு செய்வர். புற்றுக் குப் பாலிடுவார்கள். ஏழு தலைமுறை தோஷங்களையும் போக்கவல்லது இந்தப் பிரார்த்தனை!
சதுர்த்திக்கு அடுத்த நாள் (ஆகஸ்ட் 2ம் தேதி), கருட பஞ்சமி. ஆடி மாதத்தில் நாக சதுர்த்திக்கு அடுத்தநாள் கருட பஞ்சமி. கருடரை ஆராதிக்கும் நாள். அதாவது பூமிக்குக் கீழே உள்ள நாகங்களை வழிபடும் நாள் நாக சதுர்த்தி. வானில் பறக்கக்கூடிய கருடனை வணங்கும் நாள், கருட பஞ்சமி.
ஆடி அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 5-வது திதி பஞ்சமி திதி. இந்தப் பஞ்சமி திதியை கருட பஞ்சமி என்று கொண்டாடுகின்றனர். இது கருடனின் ஜெயந்தி விழாவாகப் பல வைணவக் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. கருடன் எம்பெருமானுடைய வாகனம். கருட சேவை விழா என்பது பெரும்பாலான பெருமாள் கோவில்களிலும் நடக்கக்கூடிய பிரசித்திப் பெற்ற விழா.
கருடனை ஆழ்வார் எனும் திருநாமம் சேர்த்து, கருடாழ்வார் என்று போற்று கின்றது புராணம். அதனால்தான், எல்லா வைணவக் கோயில்களிலும் பெருமாள் சந்நிதிக்கு எதிரே, தன் தலைவனான பெருமாளை வணங்கியபடியே, கைக்கூப் பியபடியே நிற்கும் கருடாழ்வார் சந்நிதி அமைந்திக்கிறது.
ஒரு பிரம்மோற்சவத்தில் கருட சேவை விழாவைத் தரிசிப்பது மிகப்பெரிய பாக்கியம். உயரே வானத்தில் வட்டமிடும் கருட தரிசனம் பாவங்களைத் தொலைத்து புண்ணியங்களைத் தந்து எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றி வைக்கும்.
நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்கிற பாவங்களுக்கெல்லாம் தவறுக்கெல் லாம் கருட புராணத்தில் தண்டனை குறிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆச்சார் யர்கள். ஆகவே, கருடருக்கு உரிய இந்த நாளில், மகாவிஷ்ணுவின் திருவடி களையும் அவரின் சந்நிதிக்கு எதிரே காட்சி தரும் கருடாழ்வாரையும் ஆத்மார்த்த மாக வணங்குவோம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வோம். சகல தோஷங்களும் விலகும். கருட பஞ்சமி அன்று பெருமாள் கோவில்களில் நடை பெறும் வழிபாட்டில் கலந்து கொண்டால் நல்ல வாழ்க்கை கிடைக்கும்.
கருட பஞ்சமிக்கு முன் நாள் நாகபஞ்சமி நாளாகவும் இருப்பதால், நாகர்களின் தலைவனான ஆதிசேஷனுக்குப் பூஜை செய்வதும் எதிரெதிர் விஷயங்களான கருடன், பாம்பு இந்த இரண்டையும் ஒரே பஞ்சமி நாளில் வணங்குகின்றபோதும், பகை கொண்ட உள்ளங்கள் மாறும். நட்பு பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் குதூகலமும் நிரம்பியிருக்கும்.