திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக எம்.ரவிச்சந்திரா பதவியேற்பு

திருமலை: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் புதிய நிர்​வாக அதி​காரி​யாக மூத்த ஐஏஎஸ் அதி​காரி எம்​.ர​விச்சந்​திரா பதவி​யேற்​றார்.

திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி​யாக அனில் குமார் சிங்​கால் பதவி வகித்து வந்​தார். இவர் முந்​தைய ஜெகன் ஆட்​சி​யில் திருப்​பதி தேவஸ்​தானத்​தில் நடந்த கலப்பட நெய் விவ​காரத்​தில் அப்​போதைய அறங்​காவலர் குழு தீர்​மானங்​களை தடுக்​காமல் அலட்​சி​யப் போக்கை கடைபிடித்​தார் என சிறப்பு புல​னாய்வு குழு கருத்து தெரி​வித்​தது. இதன் அடிப்​படை​யில் அவர் பதவி நீக்​கம் செய்​யப்​பட்​டார்.

இதையடுத்து அமராவ​தி​யில் சிஎம்ஓ அலு​வல​கத்​தில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வுக்கு முக்​கிய செய​லா​ள​ராக பணி​யில் இருந்த எம்​.ர​விச்சந்​தி​ரா, திருப்​பதி தேவஸ்​தான புதிய நிர்​வாக அதி​காரி​யாக நியமனம் செய்​யப்​பட்​டார். இந்​நிலை​யில் ஏழு​மலை​யான் கோயி​லில் உள்ள ரங்​க​நாயக மண்​டபத்​தில் அவர் நேற்று பதவி​யேற்​றார்.

முன்​ன​தாக அவர் தனது மனை​வி​யுடன் ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தார். அவருக்கு தேவஸ்​தான கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கய்ய சவுத்ரி தீர்த்த பிர​சாதங்​கள் வழங்கி கவுர​வித்​தார்.

புதிய நிர்​வாக அதி​காரி: ரவிச்சந்திரா பேசுகையில், “தேவஸ்தானஅறங்​காவலர் குழு, மூத்த அதிகாரி​கள் மற்​றும் பக்​தர்​களின் கருத்​துகளை கேட்​டறிந்​து, பக்​தர்​களின் மனம் புண்​ப​டாத வகை​யில் செயல்​படு​வேன். ஏழுமலை​

யானுக்கு சேவை செய்​யும் இந்த பாக்​கி​யத்தை வழங்​கிய ஆந்​திர முதல்​வருக்கு மனதார நன்றி தெரிவிக்​கிறேன்” என்​றார்.

இவர் ஏற்​க​னவே ஒருங்​கிணைந்த சித்​தூர் மாவட்ட ஆட்​சி​ய​ராக பணி​யாற்​றி​யுள்​ளார். திருப்​பதி தேவஸ்​தானம் குறித்​தும் அதன் நிர்​வாகம் குறித்​தும்​ நன்​றாக அறிந்​தவர்​ ஆ​வார்​.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!