சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ பட விழாவில் நடந்த சுவாரஸ்யம்

 சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ பட விழாவில் நடந்த சுவாரஸ்யம்

இயக்குநர் ‘உலக சினிமா பாஸ்கரன் ‘நாணுடைமை’, ‘திறவுகோல்’ என இரு குறும்படங்களைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ‘இன்ஷா அல்லாஹ்’ எனும் திரைப்படத்தைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். தான் உருவாக்கிய மூன்று படங்களின் மூலம் 12 சர்வதேச திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். 48 சர்வதேச திரைப்பட விழா அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். இவர் எழுதிய முகநூல் பதிவு…

கார்கி திரைப்பட இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் முக்கியமான செய்தியை நேற்று நடந்த ‘கார்கி திரைப்படம் = பெண்ணிய திரைப்பாடம்’ விழாவில் பகிர்ந்தார்.

சாய் பல்லவி அவர்கள் முதலில் திரைக்கதையை இமெயிலில் அனுப்ப சொல்லு வார்.

பிடித்து இருந்தால் மட்டுமே அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி படத்தில் ஒப்பந்தம் ஆவார்.

இது அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் வழமை.

கார்கி படத்தின் திரைக்கதையை படித்ததும், ‘தனக்கு சம்பளம் எதுவும் இப்போது தர வேண்டாம். அந்தப் பணத்தை திரைக்கதையைச் சிறப்பாக எடுப்பதற்கு முதலீடாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். இத்தகைய மகத்தான செயல் இன்றைய நட்சத்திர நடிகர்களிடம் காண்பது அரிது. கோடி களை முன்பணமாக வற்புறுத்தி பெற்று தயாரிப்பாளரை தெருக்கோடியில் நிறுத் தும் காலத்தில்,சாய் பல்லவி கடைப்பிடித்த மாண்பு மகத்தானது. மற்ற நட்சத்திர நடிகர்களும் பின்பற்ற தொடங்கினால் அதுதான் தமிழ் திரையுலகின் பொற் காலம்.

கார்கி திரைப்படத்தில் பங்காற்றிய அத்தனை கலைஞர்களிடமும் ஒரு பொதுப் பண்பைப் பார்த்தேன். அவர்கள் அனைவரிடமும் மனித நேயம் மிகுந்து இருந்தது. அதனால்தான் அப்படைப்பு ஆகச்சிறந்த படைப்பாக திகழ்கிறது.கார்கி படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் விழாவுக்கு வந்திருந்து அற்புதமாக பேசினார்கள்.

இப்படத்தில் இரண்டு இளைஞர்கள் ஒருங்கிணைந்து ஒளிப்பதிவாளராக பணி யாற்றி உள்ளார்கள். ஒளிப்பதிவாளர் ‘பிரேம் அக்கட்டு’ கேரள மாநிலத்தை சேர்ந்த வர். விழாவிற்கு நான் அழைத்த போது, ‘கேரளாவில் இருப்பதாகவும் வர இய லாத சூழல்’ என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார். அவருடன் இணைந்து பணி யாற்றிய  ஒளிப்பதிவாளர் ஸ்ரையந்தி விழாவிற்கு நிச்சயம் வருவதாக என் னிடம் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்தார்.

அவரது பெயருக்கு விளக்கம் கேட்டு வாட்ஸ் அப்பில் உரையாடிய போது அவர் ஒரு நாத்திகர் என்பதை அடையாளம் கண்டு கொண்டேன். ‘இவர் நம்ம ஆளு’ என்பதில் மகிழ்ச்சி கொண்டேன். ஆனால் விழா தொடங்குவதற்கு முன்னர், ‘அவர் வர மாட்டார்; ஏற்கனவே ஒத்துக் கொண்ட வேறு ஒரு நிகழ்ச்சிக்கு போய் விட்டதாக’ எனக்கு தகவல் தந்தார்கள். அதனால் ஒளிப்பதிவாளர்களை தவிர்த்து மீதி அனைவரையும் மேடைக்கு அழைத்து பேச வைத்தேன்.

இறுதியாக இயக்குனர் கௌதம் ராமச்சந்திரனை அழைத்து பேச வைத்தேன்.அட்டகாசமான உரையாடல் அது.

விழா முழுவதும் என் முதுகுக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண், ‘நான் பேசலாமா’ என்று மெதுவாக கேட்டார். நீங்கள் யார்? எனக் கேட்டேன். ‘நான்தான் ஒளிப்பதிவாளர் ஸ்ரையந்தி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அருகில் இருந்த வரையும் ‘ஒளிப்பதிவாளர் பிரேம்’ என அறிமுகப்படுத்தினார். இனிமையான அதிர்ச்சி ஏற்பட்டது.

இயக்குநர் பேசி முடித்ததும் அவர்கள் இருவரையும் பேச அழைத்தேன். ஒளிப்பதி வாளர் பிரேம் தமிழில் பேச தடுமாறவே அவரை மலையாளத்தில் பேசுமாறு ஊக்கம் அளித்தோம். இனிமையான உரையை தந்தார்.ஒளிப்பதிவாளர் ஸ்ரை யந்தி மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது உரையை நிகழ்த்தினார்.

இரட்டையர்கள் இணை பிரியாது பணியாற்றி ஒளிப்பதிவில் சாதனை படைக்க விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் வேண்டுகோள் விடுத்தோம். எளிமையின் சின்னமாக விளங்கிய அந்த இளைஞர்கள் இணைந்து பணியாற்றி சாதிக்க வாழ்த் துகிறேன்.

கார்கி திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அனந்த பத்மநாபன் அவர்கள் தந்த ஒத்துழைப்பு அளப்பரியது.

நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரது எண்களையும் அவரே எனக்கு அலைபேசியில் அலை போல தந்து கொண்டே இருந்தார். அவரது ஒத்துழைப்பின் பேரில்தான் இத்தனை கலைஞர்களையும் என்னால் ஒருங்கிணைக்க முடிந்தது. அவருக்கு என் வாழ்நாள் நன்றி.

விழா முழுக்க அரங்கில் இருந்தவர் அவரைப் பேச அழைத்தபோது மட்டும் ஓடிப் போய்விட்டார். இனி அடுத்து தன்னைத்தான் பேச அழைப்பார்கள் என உள்ளுணர் வுடன் செயல்பட்டு தலைமறைவாகிவிட்டார். விழா முடியும் தருவாயில் மீண் டும் தோன்றிவிட்டார். தன்னை முன்னிறுத்தாத தலைமைப் பண்பு அது.

நன்றியோடு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இடத்தில் கார்கி திரைப்படத்திற்கு விழா எடுத்தது கூடுதல் சிறப்பு.

விழாவை சிறப்பாக நடத்த உதவிய நண்பர் பிரின்ஸ் அவர்களுக்கும், பெரியார் சுயமரியாதை ஊடகத் துறைக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...