செஸ் ஒலிம்பியாட் போட்டி -பல சுவாரஸ்ய தகவல்கள்

 செஸ் ஒலிம்பியாட் போட்டி -பல சுவாரஸ்ய தகவல்கள்

இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச சதுரங்கப் போட்டியான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை போட்டிகள் நடக்க உள்ளன. 10ம் தேதி நிறைவு விழா.

செஸ் ஒலிம்பியாட் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். கடந்த இருமுறை கொரோனா காரணமாக ‘ஆன்-லைனில்’ நடந்தது. 2020ல் 163 அணிகள் களமிறங்கின. பைனலில் இந்தியா, ரஷ்யா மோதின. சாம்பியன் கோப்பையை இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டன.

தற்போது நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போட்டியில் பங்கேற்பதற்காக, 187 நாடுகளில் இருந்து வீரர் – வீராங்கனையர் 1,755 பேர்; குழுத் தலைவர்கள் 169; நடுவர்கள் 250 பேர் வந்துள்ளனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், பல்வேறு துறை அமைச்சர் கள், 18 துறை செயலர்கள், டி.ஜி.பி. உள்ளிட்டோர் அடங்கிய குழுக்கள் செய் துள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரம்மாண்டமான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (29.7.2022) மாலை 6 மணிக்கு நடைபெறு கிறது. இதில், தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக அகமதாபாத்தி லிருந்து தனி விமானம் மூலம், மாலை 4.45 மணிக்கு சென்னை வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐ.என்.எஸ். அடையாறு விமான தளத்துக்குச் செல்கிறார். பின்னர் கார் மூலம், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிற்குச் செல்கிறார். செஸ் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றுவிட்டு, கார் மூலம் ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார்.

வழி நெடுகிலும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், பா.ஜ., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மாலை 6:00 மணிக்கு விழா தொடங்குகிறது. பிரதமர் நரேந்திரமோடி, செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றி வைத்து, போட்டிகளைத் தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் வருகையையொட்டி (29.7.22) இன்றும், நாளையும் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புப் படையினர், மத்திய-மாநில உளவுப் பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புப் படை என 22 ஆயிரம் போலீசார் 5 அடுக்காக நின்று பிரதம ருக்குப் பாதுகாப்பு அளிக்கவிருக்கிறார்கள். நேரு ஸ்டேடியம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட் டுள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையில் காவல் துறையினர் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மீன்வளம், கால்நடை மற்றும பால் வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், தமிர்நாடு  இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  சிவ வீ.மெய்யநாதன், சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவர் அர்கடி துவார்கோவிச் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். சினிமா பிரபலங்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பெண்கள் அணியில் கிராண்ட் மாஸ்டரும், பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது வென்றவருமான ஹரிகா துரோணவள்ளி பங்கேற்கிறார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் தொடர்பு இல்லை. பொதுவாக செஸ் என்பது தனி நபர் விளையாடுவது. இதுவே, ஒலிம்பியாட்டில் அணியாக விளையாடுவர். ஓபன், பெண்கள் என இரு பிரிவாக நடக்கும். 187 நாடுகளில் இருந்து ஓபன் பிரிவில் 188, பெண்கள் பிரிவில் 162 அணிகள் பங்கேற்க உள்ளன. ஒரு அணியில் இரு குழுக்களும் சேர்த்து 10 பேர் இடம் பெற்றிருப்பர்.

வெவ்வேறு செஸ் போர்டில் ஒரே நேரத்தில் விளையாடுவர். குறிப்பிட்ட நேரத்தில் ஆட்டத்தை முடிக்க வேண்டும். வென்றால் 1 புள்ளி, ‘டிரா’வுக்கு 0.5 புள்ளி தரப்படும். ‘கிளாசிக்கல் சுவிஸ் லீக்’ முறைப்படி போட்டிகள் நடக்கும். ஒவ்வொரு போட்டி யும் விறுவிறுப்பாக இருக்கும். கண் அசராமல் காய் நகர்த்தும் நட்சத்திரங்களின் ஆட்டத்தைக் காண, தமிழகத்துடன் சேர்ந்து உலகமே காத்தி ருக்கிறது.

ஒலிம்பியாட் தொடரை நடத்துவதன் அடிப்படையில் இந்தியா சார்பில் 3 ஆண் கள், 3 பெண்கள் அணிகள் என மொத்தம் 30 பேர் களமிறங்குகின்றனர்.

ஆண்கள் அணி 1. விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகைசி, நாராயணன், கிருஷ்ணன் சசிகிரண்.

2. நிஹால் சரின், குகேஷ், அதிபன், பிரக்ஞானந்தா, ரவுனக் சத்வானி.

3. கார்த்திகேயன் முரளி, சேதுராமன், சூர்யசேகர் கங்குலி, அபிஜீத் குப்தா, அபிமன்யு.

பெண்கள் அணி

1. எட்டு மாத கர்ப்பிணியான ஹரிகா துரோணவள்ளி, ஹம்பி வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி.

2. வந்திகா அகர்வால், சவுமியா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி ராத், திவ்யா தேஷ்முக்.

3. ஈஷா, சாஹிதி வர்ஷினி, பிரதியூஷா, நந்திதா, விஷ்வா.

வெளிநாட்டு வீரர்களுக்கு உதவ, ஆங்கிலம் மற்றும் பிற சர்வதேச மொழிகள் அறிந்தோர், 400 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். போட்டியாளர்கள் தங்குவதற்கு, மாமல்லபுரம் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள, 21 நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில், 2,067 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்றவர்கள், 17 விடுதிகளில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையின் அனைத்து பஸ் நிறுத்தங்களிலும், பூங்காக்களிலும், ‘செஸ் ஒலிம்பியாட்’ பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. முக்கிய அலுவலகங்களின் மாடி யில், ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.

போட்டிகள் நடத்துவதற்காக, மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிராமத்தில், இரண்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்தும் விதமாக தமிழரின் கலாசாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், வேட்டி கட்டிய சதுரங்க குதிரை பொம்மைகள், ‘தம்பி’ என்ற பெயரில் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன.

செஸ் போட்டிகள் நடத்த இரண்டு அரங்கங்கள் அமைத்துள்ளனர். முதல் அரங்கம், 22 ஆயிரம் சதுர அடியில், 196 ‘செஸ் டேபிள் போர்டு’களுடன் அமைக்கப்பட்டு உள்ளன. இரண்டாவது அரங்கத்தில், 52 ஆயிரம் சதுர அடியில், 512 செஸ் டேபிள் போர்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் அரங்கில், 49 அணிகள்; இரண்டாவது அரங்கில், 128 அணிகள் விளையாட உள்ளன. ஒரு நாளைக்கு, 177 அணிகள் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 122 ஆண்கள் அணிகள், 102 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவில் இருந்து மூன்று அணிகள் பங்கேற்கின்றன.

மருத்துவ உதவிக்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு இரவு தங்குகிறார். முக்கிய பிரமுகர்கள், பிரதமரை சந்தித்து பேச உள்ளனர் குறிப்பாக அ.தி.மு.க.வைச் சேந்த முன்னாள் முதல்வர்கள் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். சந்திக்க விருக்கிறார்கள். இவர்களை பிரதமர் தனித்தனியாகச் சந்திக்கவிருக்கிறாரா, ஒன்றாகச் சந்திக்கவிருக்கிறாரா அல்லது இருவரது சந்திப்பையே தவிர்க்கிறாரா என்பது இரவுதான் தெரியும். மறுநாள் காலை, அண்ணா பல்கலை 42வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார். அன்று காலை 11:50 மணிக்கு, சென்னையில் இருந்து ஆமதாபாத் செல்கிறார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...