‘விக்ரம்’ திரை விமர்சனம்

 ‘விக்ரம்’ திரை விமர்சனம்

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாகக் கலக்கிக் கொண்டிருப் பவர் கமல்ஹாசன். மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசை அமைத்திருக் கிறார். க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

முதல் பாதியில் கதாபாத்திரத்தை மட்டுமே விவரிக்கிறது. கமல் முதல் பாதி யின் இறுதியில்தான் தோன்றுகிறார். இருப்பினும் இரண்டாம் பாதியின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களைப் பார்க்கத் தூண்டுகிறது. அந்த அள விற்கு ஒவ்வொரு காட்சியிலும் கமலும் லோகேஷ் கனகராஜ் மெனக்கெட்டிருக் கிறார்கள்.

கதை என்ன?

கர்னல் விக்ரம் கமல்ஹாசனை அப்பாவாக தத்தெடுத்து வளர்க்கும் மகன் காளிதாஸ் ஜெயராம் காட்சிகளுடன்தான் படம் ஆரம்பமாகிறது. காளிதாஸின் மனைவி சோகமாக இருக்கிறார். அவரது குழந்தையின் இதயத்தில் கோளாறு. அதைக் கனிவாகப் பார்த்துக் கொள்ளும் தாத்தாவாக இருக்கிறார் கமல். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே காளிதாஸ் கொல்லப்படுகிறார். அதன் பின்னர், கமலையும் முகமூடி அணிந்த கேங் கொல்வதாகக் காட்டுகின்றனர்.

கமலையும் காளிதாஸையும் கொல்லும் அந்த கேங் யார் என்பதை கண்டு பிடிக்கும் ஸ்பெஷல் ஃபோர்ஸ் போலீஸ் அதிகாரியாக பகத் ஃபாசில். முதல் பாதியில் அவரது விசாரணை காட்சிகள்தான் படத்தை அதிகளவில் வேக மாகக் கொண்டுசெல்கிறது. தனது முட்டைக் கண்களால் அவர் நடித்து மிரட் டும் அழகு அட்டகாசம்.

பிறகு தந்தையாக களத்தில் கமல் இறங்கி துவம்சம் செய்கிறார். நான்காண்டு களுக்கு பின் கமல் கம்பேக் கொடுத்திருக்கிறார். இவருக்காக சந்தானபாரதி நரேன், டீனா உட்பட பலர் உதவுகிறார்கள். மேலும், படத்தில் மோசமான வில்ல னாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இவருக்கு சிவானி, மகேஸ்வரி, மைனா என்ற மூன்று மனைவிகள்.

ஒரு நல்ல படத்தை 75 சதவிகிதம் தூக்கி நிறுத்துவது அதன் casting தான். இதில் இருப்பது ஒரு gun ஆன casting, பஹத், விஜய் சேதுபதி, செம்பன் வினோத், சூர்யா இவர்களுடன் கமல்.

இப்படி ஒரு casting வைத்து பஹத், விஜய் சேதுபதி, கமல் என்ற மூன்று கதாபாத் திரங்களையும் சமமான அளவு மெனக்கெட்டு எழுதி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால் இதை அடுத்த அடுத்த பாகமாக எடுக்கும் leadsஐ பார்க்கும் போது சிலிர்க் கிறது

சூர்யா, கார்த்தி, கமல், பஹத் என நால்வரும் சேர்ந்து நடிக்கும் படம் வருவதற்கு ரொம்ப நாள் இல்லைபோலதான் தெரிகிறது, பட இறுதியை பார்த்தால்

கமல், லோகேஷ், பகத், விஜய் சேதுபதி, சூர்யா என இதில் யாரை உங்களுக்குப் பிடித்தாலும் படம் கண்டிப்பாகப் பிடிக்கும், Technical team எனச் சொல்லப்படும் கேமரா, இசை போன்றவை உலகத் தரத்தில் இருந்தது

ஒவ்வொரு காட்சிகளிலும் தூள் கிளப்பி இருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் அன்ப றிவு. துப்பாக்கி, பீரங்கி என்று படம் முழுக்க ஒரே சத்தம், ரத்தம்தான் இருக்கிறது.

ஆனால் உலகத்தரத்தில் ஒரு தமிழ்ப்படம் விக்ரமை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்,  பழைய படம் விக்ரம் போலவே இந்தப் புதுப்படம் விக்ர மும் கமல் ரசிகர்களுக்கு ஒரு விருந்து.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...