பிராமணர்களே என்றும் உயர் பதவிகளில் இருப்பது ஏன்?
உயர் பதவிகளில் பிரமணர்களைத் தவிர மற்றவர்கள் வருவதில்லையே ஏன்?
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகாரம்மிக்க பெரிய பதவிகளில் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பிற இனத்தினர் அந்த அதிகாரப் பதவிகளில் அமர்வதில்லையே ஏன்- இது எப்போது மாறும்?
மாற்றுச் சமூகத்தினர் நன்றாகப் படிக்கும்போதுதான் இந்த நிலை மாறும். அரசுப் பதவிகளில் உள்ள பிராமணர்களை என்னதான் நீங்கள் கடித்துக் குதறி தனியார் நிறுவனத்திற்கு அனுப்பினாலும் அங்கும் அவனே உயர் பதவியில் இருக்கிறான். நாட்டைவிட்டு விரட்டினாலும் அமெரிக்காவின் தனியார் நிறுவன உயர் பதவி களிலும் அவனே இருக்கிறான். கிறிஸ்தவ நாடுகளில் எவ்வாறு அவர்கள் முன்னிலைப் பெற்றுள்ளார்கள்?
பிராமாணர்கள் கல்வி, கல்வி சார்ந்த திறன் ஆகியவற்றை சிறு வயதிலிருந்தே மேம்படுத்திக்கொண்டே வருகிறார்கள். அங்கு கல்வியும் பதவியும்தான் அந்தஸ்து என்று சிறு வயதிலிருந்தே அவன் மனதில் பதிய வைக்கப்படுகிறது. முக்கியமாக பிராமணருக்கு இடஒதுக்கீடு கிடையாது. (சமீப காலத்திற்கு முன்பு வரை. அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதிப் பிரிவினருக்கு 10 சதகிவிதம் ஒதுக்கீடு வழங்கிய தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில். அதுவும் குரல் வாக்கெடுப்புமூலம் அவர்களாகவே பெற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தேவைப்படாதபோது இடஒதுக்கீட்டை தவிர்ப்பதும் தேவைப் படும்போது இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதும் அவர்களால் முடியும் எந்தக் காலத்தி லும்) பீமாராவ் அம்பேத்கர் உடன் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் பல பிராமணர்கள் இருந்தாலும் தங்கள் சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டை அவர்கள் பரிந்துரைக்கவே இல்லை. இதில் முதல் ஜனாதிபதியும், பிரதமரும் பிராமணர் என்பதை நினைவில் வையுங்கள்.
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி தலைமை ஏற்று வெள்ளையரை நடுங்க வைத்த நேதாஜியும், தமிழ் இலக்கியத்தை அச்சில் ஏற்றி தமிழ் பெருமையை உலகிற்குப் பறைசாற்றிய உ.வே.சாமிநாதய்யரும் பிராமணர் என்பதை நினை வில் கொள்ளுங்கள். அவர்கள் எவ்வாறு தலைவர்களாக உயர்ந்தனர்? தங்கள் மீதான நம்பிக்கை அவர்களுக்கு இருக்கலாம் .
எப்போதும் அவர்கள் தங்கள் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதிலும் முன்னேறுவதையும் குறிக்கோளாய் வைத்துள்ளனர். இங்கு மாற்றுச் சமூகத் தினர் தங்கள் சமூகம் தவிர மாற்றுச்சமூகம் வளரக்கூடாது, மாற்றுச்சமூகம் இட ஒதுக்கீடு பெறக்கூடாது என்று போராடும்போது, அதிக மதிப்பெண் பெற்று பிராமணர் உள்ளே நுழைகிறார். அவர்களின் குறிக்கோள் வகுப்பில் முதலிடம், பள்ளியில் முதலிடம், ஐ.ஏ.எஸ்., நீதிபதி, CEO, அமெரிக்க, ஐரோப்பிய வேலை வாய்ப்பு என நகர்கிறது.
மாற்றுச்சமூகத்தினரின் பக்கத்து வீட்டு பையனைவிட அதிக மதிப்பெண் பெற் றாலே போதுமானது, எதிர் வீட்டு பையன் படிப்பையே படித்தால்தான் நம்மை மதிப்பார்கள். இந்தப் பள்ளியில் படித்தால்தான் கவுரவம், அந்தப் பள்ளியில் சேர்த்தால் செண்டம் வாங்கிவிடலாம் என்று மற்றவர்களின் மீது போட்டி மனப் பான்மையை வளர்த்துள்ளார்களே தவிர தங்கள் பிள்ளைகளின் தனிப்பட்ட திறன் களை ஊக்குவித்தார்களா எனத் தெரியவில்லை.
பெருமைக்குப் படிப்பு, கல்லூரியில் காதல், நாடகக் காதல், பெருமைக்கு ஊர் சுற்றுவது, கடைசியில் கோட்டாவில் நுழையத் தேவையான மதிப்பெண் போதும், சிபாரிசு, ஏதோ ஒரு வேலை வாழ்க்கைக்குப் போதும் என்று ஒதுங்கிவிடுதல்தான் பெரும்பாலானோர் உயர் பதவிக்குச் செல்லாத காரணங்கள்.
இங்கு போலி பிராமண எதிர்ப்பு அதிகம். 80 ஆண்டுகாலமாகப் பிராமண நேரு குடும்பத்தின் காங்கிரசை ஆதரிப்பார்கள் பிராமண எதிர்ப்பாளர்கள். பிராமணர் அத்வானியை ஓரம்கட்டி பிற்படுத்தப்பட்ட தலைவர்களால் நடத்தப்படும் கட்சி யைப் பிராமணர் கட்சி என்று அதை எதிர்ப்பார்கள். இதிலே புரியும் யார் முட்டாள் என்று.
பிராமண எதிர்ப்புக் கட்சி தி.க.வின் அரசியல் வடிவமான தி.மு.க.வின் வெற் றிக்கோ, தேசிய அளவில் பிராமண எதிர்ப்பாளரான மம்தா போன்றோரின் வெற் றிக்குக்கூட பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரே தேவைப்படுகிறார். பிராமண எதிர்ப்பு என்பதையே பிராமணர்களே ஏற்படுத்துகின்றனர். அது உளவியல் ரீதி யாகவே உங்களைப் பாதிக்கிறது.
அனைவருக்கும் மூளை ஒரே அளவுதான். அறிவும் சமம்தான். ஒழுங்காக அறி வைப் பயன்படுத்தினால் அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை , சிவன் போன்ற பெரிய விஞ்ஞானிகளாகவும், தலைமைப் பண்புகளை வளர்த்தால் மோடி, கருணாநிதி போன்று அரசியலில் வெற்றியையும் பெறலாம். நேதாஜி, நேரு போன்ற பிராமணர்கள் காந்தி என்ற பிற்படுத்தப்பட்ட சமூக மனிதரைத்தான் தலைவராக ஏற்றுக் கொண்டதையும் நினைவுபடுத்துகிறேன்.
பிராமணர்களை வெறுப்பதில் உங்கள் காலம் போய்விடுகிறது. அவர்கள் மேலே ஏறிவிடுகிறார்கள். இனியாவது யோசியுங்கள். பிள்ளைகளைப் படிக்க வையுங் கள்.