‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ மலையாளத் திரைப்பட விமர்சனம்
படம் தென்னிந்திய குடும்பப் பெண்களின் புது குடி வாழ்வைப் பற்றி விவரிக்கிறது. எப்படி ஆணாதிக்கம் திருமணம் செய்து வீட்டுக்கு வந்த பெண்ணின் வாழ்க்கை யைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறது, வெறும் வேலைக்காரியாகவே பார்க்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதுவும் 100% கல்வியறிவு பெற்ற மாநிலத்திலேயே இந்த நிலைமையா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
கதைப்படி நிமிஷா ஷஜயன் புதிதாகத் திருமணம் முடித்த பெண். மாமியார் வீட்டிற்கு வருகிறார். அது இன்னும் பழைய சித்தாந்தங்களை தலையில் தூக்கி வைத்திருக்கும் டிபிகல் மலையாள நாயர் வீடு. அங்கு பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை. கணவர் சூரஜ் அரசுப் பள்ளியில் பணிபுரிகிறார்.
தினமும் காலையில் எழுந்து சமையலறையைச் சுத்தம் செய்து, சமைத்து, மாமனாருக்கு வேண்டும் என்பதால் கரி அடுப்பில் அரிசி சாதம் வைத்து, காபி கொடுத்து என்று வழக்கமான வாழ்கை ஆரமிக்கிறது. ஆனாலும் அவளால் அவர்கள் சாப்பிட்ட எச்சத்தை எடுத்துப் போடும்போது அருவருப்பாக உள்ளது.
தினமும் இரவில் பாத்திரம் கழுவி எடுத்த மிச்சம் மீதி துர்நாற்றம் வீசும் கழிவு களைத் தூக்கிப் போட அவள் படும்பாடு சொல்லி மாளாது. அவளுக்கு வேலைக் குப் போக ஆசை. ஆனால் தடுக்கப்படுகிறது. கணவனும் கட்டிலில் வாக்குப் கொடுப்பதோடு சரி. ஒரு கட்டத்திற்கு மேல் போதும்டா சாமி… என்று தூக்கி எறிந்துவிட்டு செல்கிறாள்.
படத்தில் நிமிஷா நடிப்பில் கொடிகட்டி பறக்கிறார். முக பாவனையிலேயே தனது இயலாமை, கோபம், அலுப்பு, வெறுப்பு என்று அனைத்தையும் காட்டுகிறார். கோபத்துடன் அம்மா வீட்டிற்கு வரும் அவள், தனது தம்பியிடம் காட்டும் அந்த வெறுப்பு… மொத்த ஆண் சமூகம் செய்த அடக்குமுறையின் விளைவே…
இன்னொரு எதிர்மறை விமர்சனம்
எனக்கு ஒரு விஷயம் பிடிபடவில்லை. அந்தக் கதையின் நாயகி திருமணம் ஆன பின்பு குடும்பத்திற்குத் தொடர்ந்து சமையல் வேலை செய்வது boring routine activity ஆகத் தெரிகிறது. அவள் கணவன் மற்றும் மாமனாரின் நடவடிக்கைகள் ஆணாதிக்கமாகப் படுகிறது. ஆனால் அந்தப் பெண் சந்தித்த அனைத்து கொடுமை களையும் அவரின் தாயார் சந்தித்துள்ளார் திருமணத்திற்கு முன்பு அதற்கு ஏதேனும் தீர்வு அவர் கண்டாரா?
அவர் பிறந்த வீட்டில் அனைத்து வசதிகளையும் அனுபவித்து, அவர் தாயார் பட்ட கஷ்டங்களையும் கண்டு வாழ்ந்தவர் தனக்கு என்று வரும்போது கோபப்படுவது என்பது எப்படி நியாயமாகும்? சரி, அதற்குப் பின்பு அவர் தாயாரின் சமையலறை விடுதலைக்கு என்ன செய்தார்?
திருமணத்தைத் தூக்கி எறிந்த பின்பு அவருக்கும், அவரின் தாயார்,சகோதரி, தம்பி மற்றும் தந்தைக்கு யார் சமையல் செய்வார்கள்? எப்படி உணவு அருந்துவார்கள்? அவர்களுக்கு உணவு செய்து தருபவர்களுக்கும் அது ஒரு boring routine activity அல்லவா? அவர்களுக்கு என்ன தீர்வு? பணம் கொடுத்துவிட்டால் boring routine activity சரியாகி விடுமா? பணம் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் இறுதித் தீர்வா?
அதே ஒரு ஆண் திருமணத்திற்குப் பின்பு வேலை சென்று பணம் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பது என்பதும் boring routine activity அல்லவா? ஏன் சம்பாதித்து பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்? ஏன் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும்? அந்த ஆண் தன் சுகம், தன் சந்தோஷம் என்று வாழ்ந்துவிட்டு போகலாமே? இதற்கு என்ன தீர்வு? அப்படி ஏதேனும் ஒரு ஆண் தன் சுகம் மட் டுமே முக்கியம் என்று வாழ்ந்தால் அதே கதையின் நாயகி என்ன சொல்லுவார் என்று நினைக்கிறீர்கள் ‘பொறுப்பில்லாதவன்’ என்று ஒரே வார்த்தையில் முடித்து இருப் பார். நியாயம் பாலின வேறுபாடுகளுக்கு ஏற்ப மாறுபடுமா?
ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் பெண் எல்லோரும் தனித் தனியாகத் தன் வாழ்க்கை தன் நலன் என்று கருதி தனக்காக மட்டுமே என்று வாழ்ந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை என்னவாகும்?
மொத்தத்தில் அந்தப் படத்தில் கேட்கப்பட்ட கேள்வியில் நிறைய பிழைகள் இருப் பதாகவே எனது கருத்து.
அந்தப் படத்தில் காட்டுவதைப் போலவா நமது வீட்டுப் பெண்கள் வாழ்கிறார்கள் என்ற கேள்வியும் வருகிறது.
நான் சமையலையும், routine workகை மையப்படுத்தி கேள்வி கேட்கிறேன்.. படத் தில் காட்டப்பட்ட மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க வில்லை.
அதே போல் ஒரு குடும்பத்தை எப்படி கொண்டுசெல்வது என்பது அந்தக் குடும்பத் தினைச் சார்ந்த நபர்கள் முடிவு செய்வது. அந்தக் குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் வாழ்க்கை முறையை மிகைப்படுத்திக் காட்டி அது தவறு என்பது போல் காட்சிப் படுத்தி தன் கருத்தைத் திணிப்பது சரியாகாது.
சில சமயம் நானே நினைத்தது உண்டு தினமும் காலையில் எழுந்து வாக்கிங் சென்று குளித்து உணவு உண்டு, அலுவலகத்திற்குச் சென்று அங்கே பணி முடிந்து, இரவு வந்து உணவு உண்டு, உறங்கி அடுத்த நாள் திரும்ப அதே வேலை களைச் செய்ய வேண்டுமா என்று? ஆனால் நான் என் மகிழ்ச்சி முக்கியம் என்று என் வாழ்க்கை முறையை நினைத்து வெறுத்து தனியே கிளம்பிவிட்டால் என் பிள்ளைகள், என் மனைவி மற்றும் குடும்பத்தினர் நிலை என்னவாகும் என்று சிந்தித்து என் வாழ்க்கை முறையில் சிறிது காரசாரத்தைச் சேர்த்து வாழ்க்கை யைக் கொண்டுசெல்வேன். சில நேரம் பிரேக் எடுத்து கொள்வேன். ஆனால் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள முயற்சித்ததில்லை என்பது தான் உண்மை.
இது போன்ற படங்கள் பிற்காலத்தில் குடும்பம் என்ற அமைப்பையே சிதைத்து விடும் என்பது தான் கருத்து.