உழைப்பாளர் உரிமையை மீட்ட நாள்
உலகத் தொழிலாளர்கள் இன்று அனுபவிக்கும் 8 மணி நேர வேலை உரிமைக்குப் பின்னால் நூறு ஆண்டுகள் போராட்டமும், பல நூறு உயிர்த் தியாகங்களும் உள்ளது.
18 ஆம் நூற்றாண்டு வரை உலகின் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் தினமும் 12 முதல் 18 மணிநேரம் கட்டாயமாக வேலை செய்ய வேண்டிய சூழல் இருந்தது.
இந்தியாவின் மே தினம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது தமிழகத்தில் தான். இந்தியாவின் முதல் தொழிற்சங்கவாதியான சிங்காரவேலர், 1923ஆம் ஆண்டு சென்னையில் மே தினக் கொண்டாட்டத்தை நடத்தினார். மே தினம் முதன்முதலில் விடுமுறை கண்டது 1957ம் ஆண்டு கேரளாவில்.
முதல்முறையாக எட்டு மணி நேர உழைப்பு நேரத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது 1942ம் ஆண்டில் அம்பேத்கர்தான். நிறுவனங்களில் கொடுக்கப்படும் மருத்துவக் காப்பீடு, உங்களுக்கான விடுமுறைகள், அடிப்படை ஊதிய உயர்வு, தொழிலாளர் காப்பு நிதி, தொழிலாளர் சங்கங்கள், பெண்களுக்கான பேறுகால விடுமுறை என பலவற்றுக்கும் அம்பேத்கரே காரணம். அலுவலகங்களில் உங்க ளுக்கான உரிமை மறுக்கப்பட்டால், போராடும் உரிமை கிடைத்ததும் அம்பேத்க ராலேயே!
மே தின விடுப்பு கிடைத்தது எப்படி?
அதிக நேர பணியைக் கண்டித்து 1830 களில் பல நாடுகளிலும் போராட்டங்கள் முளைவிட தொடங்கியது. இந்த காலகட்டத்தில் முதன் முதலாக இங்கிலாந் தில் ‘சாசன இயக்கம்’ ஆறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியது, இதில் முக்கியமான கோரிக்கை 10 மணிநேரப் பணி கோரிக்கையாகும். அதன் பின்னர் 1834இல் பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தங்களுக்கான 15 மணி நேரக் பணியைக் குறைக்க ‘ஜனநாயம் அல்லது மரணம்’ என்ற முழக்கத்தை முன் வைத்துப் போராடினார்கள்.
அதன்பின்னர் உலக நாடுகள் பலவற்றிலும் பணிநேரத்தை குறைக்க தொடர் போராட்டங்கள் நடந்து வந்தது. ஆனால் அவையனைத்தும் தோல்வியில்தான் முடிந்தது. இந்தச் சூழலில்தான் ஆஸ்திரேலியாவில் ஒரு நாளுக்குப் 15 மணி நேரம் வரை ஈவிரக்கமின்றி வேலை வாங்கப்பட்டதைக் கண்டித்து ஆஸ்தி ரேலியத் தொழிலாளிகள் எட்டு மணி நேர வேலை கேட்டு 1856ம் ஆண்டின் ஏப்ரல் 21ம் தேதி போராட்டம் நடத்தினார்கள். ஆஸ்திரேலியா வில் எழுந்த கோரிக்கை அடுத்ததாக அமெரிக்காவிலும் எழுந்தது.
1886ஆம் ஆண்டில் மே 1ஆம் தேதி போராட்டம் நடத்த சிகாகோ தொழிலாளர்கள் அழைப்பு விடுத்தனர். ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
அன்றைய நாள் போராட்டம் அமைதியாகவே நடந்தது. பேச்சுகள் அனைத்தை யும் ஒழுங்கு குலையாமல் மக்கள் கவனித்தனர். மேயராக இருந்த கார்டன் ஹேரிசன், ‘வன்முறைக்கு வாய்ப்பேதும் இருக்காது’ எனச் சொல்லி காவல் துறையின் ஒரு பகுதியை வீட்டுக்கு அனுப்ப, காவல் தலைமை அதிகாரி யிடம் கூறுமளவுக்கு அமைதி இருந்தது.
இரவு பத்து மணிக்குப் போராட்டம் முடியும் நேரத்தில் மழை பெய்தது. 200 பேர் மழை நிற்பதற்காக சதுக்கத்தில் காத்திருந்தனர். திடீரென 180 காவலர்கள் சதுக் கத்தை சூழ்ந்தனர். மக்கள் அங்கிருந்து கலைய உத்தரவிட்டனர். ‘மழை அடங் கவே காத்திருக்கிறோம்’ எனத் தலைவர்கள் கூறியதற்குக் காது கொடுக்க வில்லை. அடுத்த அரச பயங்கரவாதமோ என லேசான பதட்டம் படர்ந்தது. ஆனால் வேறு உத்தி பயன்படுத்தப்பட்டது.
திடுமென எங்கிருந்தோ ஒரு குண்டு காவலர்கள் பக்கம் வந்து விழுந்து வெடித் தது. ஒரு காவலர் பலியானார். எங்கிருந்து குண்டு வந்தது என்றெல் லாம் ஆராயாமல் காவலர்கள் சுடத் தொடங்கினார்கள். பதினைந்து தொழி லாளர்கள் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டுக்கான விசாரணைக் குழுவில் முதலாளிகளும், நிறுவன மேலதிகாரிகளும் இறந்த காவலரின் உறவினர் களும் இருந்தனர். கைது செய்யப்பட்ட எட்டு பேரில் ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சர்வதேச எதிர்ப்புக்குப் பிறகு நான்கு பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். இறுதிவரை குண்டு வீசியதற்கான சாட்சி எதுவும் அரசு தரப்பில் அளிக்கப்படவே இல்லை.
1891ம் ஆண்டு கூடிய சர்வதேச கம்யூனிச அகிலம் சிகாகோ சம்பவத்தை முன்னிட்டு மே முதல் நாளை சர்வதேச உழைப்பாளிகள் தினமாக அனுசரிக்க முடிவெடுத்தது. சோவியத் யூனியனில் அக்டோபர் புரட்சி முடிந்து, 1917ம் ஆண்டு பாட்டாளி வர்க்க ஆட்சி அமைந்த நான்காவது நாளில் 8 மணி நேர உழைப்பு நேரம் தொழிலாளர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டது.