பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த 3.6.9. திரைப்படம்

 பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த 3.6.9. திரைப்படம்

தமிழ்த் திரையுலகில் பல்வேறு புதிய முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது புதிய சாதனை ஒன்றை தமிழ்த் திரையுலகின் அறிமுக இயக்குநர் சிவ மாதவ் படைத்துள்ளார். 

21 வருடங்களுக்குப் பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித் துள்ள திரைப்படம் உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங் களில் படமாக்கப்பட்டுள்ளது. ‘3.6.9’ என்று தலைப்பிட்டுள்ள இந்தப் படத்தை 24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க, 75க்குமேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம் பிள்ளையார்குப்பத் தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 2021, டிசம்பர் 15 அன்று பட மாக்கப்பட்டது.

குறைந்த நேரத்தில் ஒட்டுமொத்த படத்தையும் படமாக்க வேண்டும் என்று படக் குழு திட்டமிட்டிருந்ததால் படக்குழுவினர் ஆயத்தமாகவே படப்பிடிப்பிற்கு வந்த னர். சரியாக காலை 11.40  மணிக்குத் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சரியாக 1.01 மணிக்கு வரை மட்டுமே தொடங்கியது. தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஒரே நேரத்தில் 24 கேமராக்கள், 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள், 450 பணியாளர்களைக் கொண்டு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் 81 நிமிடங்களில் நிறைவு பெற்றது.

நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஹரிபா ஹனிப் நடுவராக இருந்து 81 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் உருவாகத்தை நேரடியாகப் பார்வையிட்டு, அமெரிக்காவைத் தலையிடமாகக் கொண்டு செயல் படும் வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பிற்கு உலக சாதனைக்குப் பரிந்துரை செய்துள்ளார். விரைவில் இதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இப்படத்தில், முக்கிய காயதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வில்லன் கதாபாத்திரத் தில் படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.எஸ். நடத்துள்ளார். ஒளிப்பதிவு மாரிஸ்வரன், இசை கார்த்திக் ஹர்ஷா, படத்தொகுதி ஆர்.கே.ஸ்ரீநாத், கலை இயக்கம் ஸ்ரீமன் பாலாஜி.

படத்தின் இயக்குநர் சிவ மாதவ் கூறுகையில், “தமிழில் பல்வேறு கதை அம்சங் கள் கொண்ட திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் இந்தப் படம் மாறுபட்ட நிலையில் இருக்கும். ஹாலிவுட் தரத்துக்கு இணையான தொழில்நுட் பங்களைக்கொண்டு படம் பிடிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க விஞ்ஞானம் சார்ந்த படமான இதில் ரசிகர்கள் எதிர்பாக்கக்கூடிய சுவாரசியங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.  இந்தப் படத்தில் கதாநாயகி, சண்டைக் காட்சிகள், பாடல்கள் இல்லை. ஆனால், படத்தைப் பார்க்கும்போது இவை அனைத்தும் இடம் பெற் றிருக்கின்ற உணர்வை ஏற்படுத்தும். 81 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இப்படம், திரைக்கு வரும்போது 2 மணி நேர நீண்ட படமாக இருக்கும். எதிர்காலத்தில் விஞ்ஞானத்தின் மாறுபட்ட தொடக்கமாகவும் இப்படம் அமையும்’ என்றார் இயக் குநர் சிவ மாதவ்

நடிகர் ஆரி பேசும்போது, “இந்தப் படத்திற்கு வருமுன் படத்தைப் பற்றிய விஷயங் களைக் கேட்டேன். சயன்ஸ் பிக்சன் படம் என்றார்கள். ‘3.6.9’ எனது கார் நம்பர். அந்த நம்பர் பற்றி பலர் சொன்ன பிறகுதான் தெரிந்தது. உலகில் எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அது ‘3.6.9’ நம்பரில் அடங்கிவிடும். அப்படியான பவர் அந்த நம்பருக்கு உண்டு. அந்தக் கருத்தில்தான் இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள் என நினைக்கிறேன். இப்போது சினிமாவில் ஒரு பஞ்சாயத்து போய்க்கொண் டிருக்கிறது. பீஸ்ட் – கே.ஜி.எஃப். ஒப்பீடு செய்கிறார்கள் முதலில் இதை ஒப்பிடு வதே தவறு. கே.ஜி.எஃப். ஒரு பான் இந்தியப் படம். ஆனால் பீஸ்ட் ஒரு மொழிக் கான படம். அதற்காக பீஸ்டை தாழ்த்திப் பேசுவது மிகவும் தவறு.

தமிழ் சினிமா செய்யாத சாதனைகளே இல்லை. இங்குதான் ‘ஒத்த செருப்பு’ போன்ற படம் வந்தது. உலகின் 100 சிறந்த படங்களில் பட்டியலிடப்பட்ட ஒன்று ‘நாயகன்’ படமும் இங்குதான் உருவானது. தமிழ்ப் படங்களைத் தாழ்த்தி பேசக் கூடாது.

இதோ இந்தப்படமும் 81 நிமிடத்தில் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இப்படிப் பட்ட படங்களை நாம் கொண்டாட வேண்டும். முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். பாக்யராஜ் சார் 21 வருடங்கள் கழித்து நாயகன் ஆனார் என்கிறார்கள். ஆனால் அவர் எப்போதும் ஹீரோதான். அவரளவு சாதனை கள் எவரும் செய்யமுடியாது. ‘சின்ன வீடு’ எனும் அடல்ட் படத்தைக்கூட குடும் பத்தோடு பார்க்கும்படி எடுப்பவர். ஒரு அடல்ட் படம் எப்படி எடுக்க வேண்டும் என அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் மாதிரி அடல்ட் படம் எடுத்தால் நான் நடிக்கத் தயார். சமீபத்தில் விஜய் நடித்த பீஸ்ட் மற்றும் கன்னட மொழிமாற்றுப் படம் கே.ஜி.எப். 2 ஆகியவை வெளிவந்து ஓடிக்கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சிலர், பீஸ்ட் படம் குறித்து எதிர் மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். விமர்சனம் செய்வது பத்திரிகை யாளர்கள், பொதுமக்கள் உரிமை. ஆனால், திரைப்படத்தை வெளியிடும் திரை யரங்க உரிமையாளர்கள் இப்படி எதிர்மறையாக விமர்சனம் செய்யக்கூடாது” என்று பேசினார்.

அடுத்து பேசிய கே.பாக்யராஜ், “விமர்சனம் செய்பவர்கள் சிலர் மென்மையாகச் சொல்வார்கள். சிலர் கடுமையாகச் சொல்வார்கள். நாம் அதைப் பற்றிப் பொருட் படுத்தாமல், அந்த விமர்சனத்தில் உள்ள விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அடுத்த முறை அந்தத் தவறு நடக்காமல் நடந்துகொள்ள வேண்டும். மற்றபடி பிறரை விமர்சிக்காதீர்கள் என்றோ, இப்படி விமர்சிக்காதீர்கள் என்றோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என ஆரிக்கு அறிவுரை கூறினார்.

அவர் மேலும் பேசும்போது, “நான் கதாநாயகனாக நடித்து 21 வருஷம் ஆச்சு என்று சொல்லி என்னை சங்கடப்படுத்திவிட்டார்கள். ஸ்கிரினில் வருகிறவர் தான் கதாநாயகனா? கதை, திரைக்கதை எல்லாம் சும்மாவா? அது இருந்தால்தான் ஹீரோவா?  நான் அவ்வப்போது நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நான் எப் போதும் ஹீரோதான். இதுவரை நான் கிறிஸ்தவர் கெட்அப் போட்டதில்லை. இந்தப் படத்தில்தான் முதன்முறையாகப் போட்டிருக்கிறேன். இப்படம் சயன்ஸ் பிக்சன் என்றார்கள். இவர்கள் சாதனைக்காகத்  திட்டமிட்டதை எல்லாம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டு எடுத்தார்கள். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”  என்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...