உலகப் புத்தக தின சிறப்புக் கட்டுரை

 உலகப் புத்தக தின சிறப்புக் கட்டுரை

கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்புப் பாலமாக இருப்பது புத்தகம். தலைமுறைகள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையி லான பாலமும் புத்தகம்” என்கிறது யுனெஸ்கோ அமைப்பு. புத்தகங்கள் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவு கின்றன என்றும், மனிதகுலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல் களைக் கொண்டாடும் நோக்கத் துடன் 1995ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23ஆம் தேதியை உலகப் புத்தக மற்றும் காப்புரிமை தினமாகக் கொண்டாடி வருகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமை மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து புத்தக தினம் கொண்டாடப்படு கிறது.

உலகில் பல இலக்கியவாதிகள் இந்தத் தினத்தில் பிறந்தும் மறைந்தும் இருக் கின்றனர். முக்கியமாக, உலகின் தலை சிறந்த சோக காவியமான லியர் அரசன், காதல் காவியம் ரோமியோ ஜுலியட்’ ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ, மாக்பெத் போன்றவைகளையும், மச் அடோ அபவுட் நத்திங் (Much Ado About Nothing) என்ற நகைச்சுவை நாடகத்தையும் எழுதியவர் தலைசிறந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர். இவர் பிறந்தது மட்டுமல்ல உலகைவிட்டு மறைந்த தும் ஏப்ரல் 23ல் தான்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்.

1616, ஏப்ரல் 23ஆம் நாள் உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான ஷேக்ஸ்பியர், செர்வேண்டிஸ், இன்கா கார்கிலாசோ (William Shakespeare, Miguel de Cervantes, Inca Garcilaso de la Vega ) போன்றோர் இறந்தனர். மாரிஸ் டிரியூன் , ஹால்டோர் லேக்சனஸ், விளாதிமிர் நபொகோவ், ஜோசப் பிலா மற்றும் மானுவல் மெஜியா (Maurice Druon, Haldor K.Laxness, Vladimir Nabokov, Josep Pla and Manuel Mejía Vallejo) போன்ற எழுத்தாளர் களும் இந்த உலகத்தைப் பார்த்த நாள் ஏப்ரல் 23 தான்.

மரியாதை செய்யும் வகையில், ஒரு குறியீடாக ஏப்ரல் 23ஐ உலகப் புத்தக் தினமாகக் கொண்டாட யுனெஸ்கோ அமைப்பு முடிவு செய்தது. உலகம் முழுவ தும் உள்ள இளைஞர்கள் வாசிப்பின் நேசிப்பையும், ருசியையும், இன்பத்தையும் கண்டறிய வேண்டியும், அதன் மூலம் சமூக, கலாசார முன்னேற்றம் மற்றும் மனிதநேய உணர்வை வென் றெடுத்து, மரியாதை செய்ய வேண்டியும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க புத்தக தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இன்றைய நவீன அறிவியல் யுகத்தில், வலைதளமும், தொலைபேசி, கைபேசி களும், மின்னஞ்சலும், முக்கியமாக தொலைக்காட்சியும், மக்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தை பிடுங்கிவிட்டன; புதைகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக் கின்றன. ஆனால் புத்தகம்தான் நிரந்தரமாய் நிலைத்து நின்று சுவையும், இன்ப மும், ரசனையும தரவல்லது. படிப்ப தன் ஆழ்ந்த அருமையான சுவை என்பது, வலைதளத்தில் நிச்சயமாகக் கிடைக்காது. புத்தகம் என்பது ஒருவரின் சொத்து. படிக்கப் படிக்க இன்பமும் தேடுதலும் கிடைக்கும். புத்தகம் படிக்காமல் ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியாது. ஆகையால் புத்தகத்தை வாசிப்போம் புதிய கருத்து களை நேசிப்போம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...