உலக பூமி தின சிறப்புக் கட்டுரை

சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970-ம் ஆண்டு முதல், உலக நாடுகள் அனைத்திலும், ஏப்ரல் 22ஆம் தேதியை ‘உலக புவி தினம்’ என்று கடைப்பிடித்து வருகிறோம். ‘நம் பூமியை மீட்டெடுப்போம்’ என்பதே இந்தாண்டின் கருப்பொருள்.

1969-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார், ஜான் மெக்கானல். இவர் உலக அமைதியை வலிறுத்தி குரல் கொடுத்து வந்தவர். அவர் அந்தக் கூட்டத்தில், ‘மனிதர்களும், பிற உயிரினங்களும் வாழுகின்ற இந்த பூமியின் அழகை சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழல் உருக் குலைந்து, மாசுபடாமல் பாதுகாக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்’ என்று பேசினார். அதோடு இதற்காக ஆண்டுதோறும் ‘புவிநாள்’ என்ற பெயரில் ஒரு தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அந்த நேரத்தில், ஐக்கிய அமெரிக்காவின் சுற்றுச்சூழலியல் நிபுணரும், மேலவை உறுப்பினருமாக இருந்த கேலார்ட் நெல்சன் என்பவர், சுற்றுச்சூழல் பற்றிய அறிவை உலக மக்களிடையே பரப்புவதற்கு, 1970-ம் ஆண்டு ஏப்ரல் 22-ந் தேதி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இந்த நாளில்தான், புவியின் வட கோளப் பகுதியான வசந்த காலத்தையும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலத்தையும் சந்திக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு, கோலர்ட் நெல்சனின் அழைப்பை ஏற்று, 2 கோடி பேர் அந்த நிகழ்வில் பங்கெடுத்தனர். அது முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதியை புவி தினமாக கடைப்பிடித்து வருகிறோம். உலகம் முழுவதும் 175 நாடுகள் இந்த தினத்தை கடைப்பிடிக்கின்றன.

உலக உயிர்கள் வாழத் தகுதியான இடமாக இந்த பூமி மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் பதிவு செய்கின்றன. அத்தகைய அற்புதம் நிறைந்த இந்த பூமி, மனிதர்களின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, காற்று மாசடைந்து, தன்னுடைய தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிறது. இப்படியே போனால், இந்த பூமியில் உலக உயிர்கள் வாழ்வது என்பது கேள்விக் குறியாகிவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த நிலை ஏற்பட இன்னும் பல கோடி ஆண்டுகள் ஆகலாம் என்றாலும், அதற் கான வாய்ப்புகள் அதிகம் என்பதும், அந்த இக்கட்டான சூழலை நம்முடைய பிற்கால சந்ததியினர் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதுமே இங்கிருக்கும் அபாயம். பூமியை மாசடையாமல் காப்பது நம் கடமை. அதில் முதலாவதாக நாம் செய்ய வேண்டியது பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை, குப்பைத்தொட்டிகளில் போடுவது.  பாலிதீன் (Polythene) எனும் பெயரில் நீரை நிலத்திற்கு அடியில் செல்ல விடாமல் பூமித்தாயின் மூச்சை அடைக்கிறோம். பூமியின் இரத்தம் போல் உள்ள நீரை மாசுப்படுத்தி அதை நோயாளியாக மாற்றுகிறோம். இத்தனை செய்தும் பூமி இன்னும் நமக்கு மழையையும், சுத்தமான காற்றையும் முடிந்த அளவு தந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் மாசுபாடு, மழையின்மை, பூமி வெப்பமடை தல் அதிகரித்து வருகிறது. இது மனித வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத் தலை ஏற்படுத்தி வருகிறது.  உலக பூமி தினமான இன்று, இயற்கையின் அதிச யங்களை நம் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லி, வருங்காலச் சந்ததிகள் நிம்மதியாக வாழ வழி வகுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!