பள்ளியில் பாலியல் குற்றங்கள் கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.

 பள்ளியில் பாலியல் குற்றங்கள்  கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.

பள்ளிகள்.. மாணவ, மாணவியர்களைச் சீர் படுத்துகிறதா? சீரழிக்கிறதா? என்ற கேள்வி  ஒரு ஆசிரியை ஒரு மாணவன் தலையில் கத்தியால் தாக் கிய சம்பவம் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் எழுந்திருக்கும் என்ப தில் சந்தேகம் இல்லை.

பொதுவாக பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் அநேகம் பேர் செல்போன் எனும் மனநோயினால் பாதிக்கப்படுவதாக மருத் துவ துறை அதிகாரிகள் எடுக்கப்பட்ட சர்வேயில் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கு முக்கிய காரணமாக அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பெற் றோர்கள் மீதே. அதாவது அடுத்த வீட்டு குழந்தையைப் போல் தன் குழந்தை யும் படிக்க வேண்டும் என பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அந்தக் குழந்தை பிறக்கும்போதே டாக்டர் ஆகணும் என்ஜினியர் ஆகணும் என்ற இவர்களது கனவை அக்குழந்தைகளின் மீது திணிக்கிறார்கள்.

பிறந்த 10 மாதத்தில் கோச்சிங் சென்டரில் கொண்டுபோய் விட்டுவிடு கிறார்கள். தொடர்ந்து அக்குழந்தை இரண்டரை வயதாகும்போது Pre KG ,Lkg, Ukg என அக்குழந்தை நடக்க ஆரம்பிக்கும் முன்னிருந்தே படிக்க வைக் கப்படுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, டான்ஸ், பாட்டு, நீச்சல், மீயூசிக், பேட்மிட்டன், கிரிக்கெட் என இதர வகை கற்பிப்புகளும் தொடக்கிவிடுகிறார்கள் பெற்றோர்கள். காலை ஆறு மணி எழுப்பிவிட்டு மாலை பத்து  மணிக்குச் சாப்பாடை வாயிற்குள் திணித்துவிட்டு படுக்க அனுப்புகிறார்கள். இதில் ஹோம் வொர்க் வேறு.. அக்குழந்தைக்குத் தொடர்ந்து பணிகளைத் திணித்துக் கொண்டு இருந்தால் நாளடைவில் சோர்வும் விரக்தியும் ஏற்படுவது இயற்கையே.

இவ்விரக்திக்குக் காரணமானவர்கள் அதைத் தீர்க்க எந்த முயற்சியும் எடுப்ப தில்லை. பிள்ளைகளிடம் இன்று வகுப்பில் என்ன நடந்தது? என்னென்ன பாடங்கள் உனக்குப் பிடித்தது. டீச்சர் ஏதாவது சொன்னார்களா? உன்னோட பிரண்ட்ஸ் இன்று ஏதாவது புதிய விஷயங்களை உன்னுடன் பகிர்ந்து கொண்டார்களா? எனக் கேட்கிறார்களா? இல்லை. அப்படி கேட்கும் பெற் றோர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இந்த மாதிரி கேள்விகளின் மூலம் பிள்ளைகளின் எண்ணங்களைப் பெற் றோர்கள் தெரிந்து கொள்ளமுடியும். என்னதான் மறைக்கக்கூடிய பிள்ளை களாக இருந்தாலும் சில நேரங்களில் மனம்விட்டு பகிர்ந்து கொள்ளத்தான் நினைப்பார்கள். நம்மீது நம் பெற்றோர் அக்கறையுடன் இருக்கிறார்கள் என்ற சந்தோஷமும் தோன்றும். அதே நேரத்தில் பிள்ளைகள் என்ன வெறுக் கிறார்கள், எதை நேசிக்கிறார்கள் என்பது பற்றியும் பெற்றோர்களுக்குப் புரியவரும்.

தற்போது ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது அதிகளவில் நடக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆசிரியைகளும் மாணவர்களிடம் தவறான முறையில் பழகுவதும் நடக்கிறது. இதைப் பெற் றோர்களே கண்காணிக்கவேண்டும். அரசு தக்க தண்டனை வழங்கினாலும் இந்தக் குற்றத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதற்கு முழு பொறுப்பு பள்ளி நிர்வாகமே ஏற்கவேண்டும். பள்ளியில் ஒரு பாலியல் குற்றம் நடந்தாலும் தமிழக அரசு  அந்தப் பள்ளியை முழு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளவேண்டும். பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கவேண்டும். அதைப் பெற்றோர் ஆசிரியர் குழு கண்காணிக்கவேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகளில் பாலியல் புகார்கள் எழுந் துள்ளதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் குற்றங் களில் இருந்து குழந்தைகளைப் காப்பதற்கான சட்டத்தின் (போக்சோ சட்டம்) கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை பள்ளிகளில் நிகழக்கூடிய குற்றங்களை எவ்வாறு கையாள்வது தொடர்பான விவாதங் களை எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளாக 7,293 போக்சோ வழக்கு கள் நிலுவையில் உள்ளது ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது. பதிவான வழக்குகளில் 10% வழக்குகளில் மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிற வழக்குகள் ஆறு மாதங் களுக்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும்.

மாநில குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி கடந்த ஐந்து ஆண்டு களாகப் பதிவாகும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

 சில ஆண்டுகளுக்கு முன் வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொன்ற வழக்கில் கைதான இர்பான் விஷயத்திலேயே பாருங்கள். அவன், டீச்சர் மேல் வைத்திருந்த கோபம் கொலைவெறி தூண்டலாக வருவதற்கு எப்படியும் ஒரு வார காலமாவது ஆகியிருக்கும். அந்தச் சிந்தனையில் அவன் இருப்பதைப் பெற்றோர்களால் உணர்ந்துகொள்ள முடியவில் லையே. ஏன் அவனைப் பற்றி எந்தப் புரிதலும் அவனது பெற்றோர் இடத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அவன் ஒரு படம் பேர் சொல்லி அந்தப் படத்தை அடிக்கடி பார்த்துதான் கொலை செய்யும் திட்டத்தை நிறைவேற்றினேன் என்கிறான். அவனது படிப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், அவனது விருப்பு வெறுப்பு போன்றவை பெற்றோரால் கவனிக்கப்படவில்லை. அல்லது அதீத செல்லம் காரணமாக அவன் திசைமாறிச் செல்ல வழி ஏற்பட்டிருக்கும்.

இச்செயலை ஆரம்பத்திலேயே கவனித்து தவறை உணர்த்தியிருந்தாலோ அல்லது கவுன்சிலிங் கொடுத்திருந்தாலோ இன்று அநாவசியமாக ஒரு ஆசிரியை பலியாகி இருக்கமாட்டார். ஒரு சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டும் இருக்கமாட்டான்.

அவனது செயல் எல்லை மீறியதாக இருந்தாலும் ஒரு பக்கம் அவனுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் அந்த ஆசிரியை நடந்து கொண்ட விதம் பற்றியும் நாம் அறிந்து கொள்ளாமல் இருக்க முடிய வில்லை.

இன்றைய பிள்ளைகளின் கல்வியியல் எப்படிச் செல்கிறது? எவ்வாறு பிள்ளைகளின் விருப்பங்களை ஆசிரியர்கள் புரிந்து அவர்களுக்குத் தக்க வாறு பாடம் நடத்துகிறார்கள். மாணவ, மாணவியர் வெறுப்படையும் வகை யில் பாடத்திட்டங்கள் இருக்கின்றனவா? அல்லது ஆசிரியர்கள் பிள்ளை களுக்குத் தண்டனையும் அவமரியாதையும் மற்ற மாணாக்கர்களுக்கு முன் அரங்கேற்றுகின்றார்களா என்பதும் கேள்வி பதில் உண்மை என்பதை உமா மகேஸ்வரி ஆசிரியை கொலையின் மூலம் நமக்குப் புரிய வைக்கிறது.

மற்ற பாடங்கள் நடத்தும் ஆசிரியர்களை அவன் எதிரியாகப் பார்க்க வில்லை. குறிப்பிட்ட இவர் மீதுதான் இர்பான் கொலை செய்யுமளவுக்கு வெறுப்படைந்திருக்கிறான். சமூக அக்கறையோடு இதை நோக்கவேண்டும். அவன் அப்பாடத்தில் வீக்காக இருக்கிறான் என்றால் அதை அந்த ஆசிரியர் புரியும்படி சொல்லிக் கொடுத்திருக்கலாம். இல்லையெனில் தனியாக அவனுக்கு வகுப்புகள் எடுத்திருக்கலாம். அல்லது அவனது நடவடிக்கை சரியில்லையெனில் பிரின்ஸிபால் அவர்களிடம் சென்று முறையிட்டி ருக்கலாம். இப்படி அவனை குற்றவாளி ஆக்கி பெற்றோரிடம் அடிவாங்க வைத்து அவனது மனதை வெறிக்குள்ளாக்கி தன் வாழ்க்கைக்கே ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்குக் கொண்டுபோய் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றே படுகிறது.

இன்னொன்று, அவரவர் குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகளை மனதிற்குள் குழப்பிக்கொண்டு அந்தக் கோபத்தைத் தனக்குக் கீழாக இருப்பவர்களிடம் காண்பிப்பது ஆசிரியர்கள் மட்டுமல்ல.. பேங்க்கில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களும் இந்தத் தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்.

இதன் மூலம் அடுத்தவரின் வெறுப்புக்குத்தான் ஆளாகி விடுகிறோம் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. இதைப் புரிந்தும், வகுப்பில் இறுகிய முகத்துடன் இல்லாமல் பிள்ளைகளை அனுசரித்தும் அரவணைத்தும் மகிழ்ச்சியுடனும்  பாடங்களை எடுக்க வேண்டும் ஆசிரியர்கள். இப்படிச் செய்தால் மாணவ, மாணவியர்களுக்கும் நட்பு பாராட்டும்  ஆசிரியரிடம் இம் மாணவனைப்போல் வெறுப்புகள் வர வாய்ப்பே ஏற்பட்டு இருக்காது.

கல்வி சூழலும் மாறுபட வேண்டும். நம் பள்ளி மாநிலத்தில் முதலாவதாக வரவேண்டும் என்று நினைத்துப் படிக்கும் பிள்ளைகளை கழுதை போல் பொதி சுமக்க வைக்கிறார்கள். குழந்தைகளுக்குப் புரியும்படி பாடங்கள் அமைவதில்லை. இதைப் படி நாளை டெஸ்ட் என்றால், அவர்களுக்குப் பாடத்தின் மீது வெறுப்புதான் தோன்றும். அனைத்து வகை மாணவர்களுக் கும் பொதுவான பாடங்களை எளிய வகையிலும், அவரவர் விருப்பதுக்கும், தெரிந்து கொள்ளும் விதத்திலும் பாடங்கள் அமைந்தால் நல்லது. படித்து பரிட்சை எழுதுவதைவிட செயல்முறை பாடங்களுக்கு அதிக முக்கியத் துவம் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி கற்பார்கள். பரிட்சை என்ற பயம் மனதில் எழுந்து இந்த மாதிரி கொடூர செயல்கள் செய்து தங்கள் வாழ்க் கையை வீணாக்கும் மாணவ, மாணவியர்களை உருவாக்காமல் இருப்பது பெற்றோர், ஆசிரியர், கல்வித்திட்டம் இவற்றில் பங்குதான். இதை வீடும், அரசும், சமூகமும் விதியை மதியால் வெல்வோம் என்ற பழமொழிக்கேற்ப நடைமுறைக் கொள்கையை உருவாக்க வேண்டும்

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...