நடிகை பூர்ணிமா பாக்யராஜின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியிட்டார்

 நடிகை பூர்ணிமா பாக்யராஜின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியிட்டார்

நடிகை பூர்ணிமா பாக்யராஜின் சுயசரிதை ‘தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை இராஜா அண்ணாமலை புரத்தில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் சமீபத்தில் நடைபெற்றது. புத்தகத்தை சென்னை தெற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, நடிகை சினேகா பிரசன்னா பெற்றுக் கொண் டார். இந்தப் புத்தகத்தின் ஆங்கில பதிப்பான ‘Aesthetics Recaptured’ நூலை நடிகை ரம்யாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

தமிழில் புத்தகத்தை திருமகள் ராஜாராம் எழுதியுள்ளார். ‘Aesthetics Recaptured’ நூலை ஹேமாமாலினி குணாநிதி எழுதியுள்ளார். 20 தலைப்பு களுடன், 20 பகுதிகளாக இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

தமிழ் நூலின் திறனாய்வை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் விஜயலட்சுமி இராமசாமி மேற்கொண்டார், ஆங்கில நூலின் திறனாய்வு பணியை V மாத இதழின் தலைமை நிர்வாக அதிகாரி சுமதி ஸ்ரீநிவாஸ் செய்தார்.

இந்தி மலையாளம், தமிழ் என ஒரு சமயத்தில் மூன்று மொழிப் படங்களி லும் பிசியாக இருந்தவர் பூர்ணிமா. 1983 தீபாவளிக்குத் தமிழில் ரஜினியுடன் நடித்த ‘தங்கமகன்’, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த படம், மலையாளத் திலும் ஒரு படம் என ஒரே நேரத்தில் மூன்று படங்கள் ப்ளாக் பஸ்டர் கொடுத்தவர்.

தமிழ்,மலையாளம், தெலுங்கு என்று பல மொழி திரைப்படங்களில் நடித் துள்ளார். பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் மனைவியான இவர் திரைத்துறை பிரபலங்கள் ஆன சாந்தனு மற்றும் சரண்யாவின் தாயார் ஆவார். தன் அனுபவங்களைத்தான் சுயசரிதையாக எழுதி வெளி யிட்டிருக்கிறார்.

சினிமாவில் பரபரப்பாக இருந்தாலும் சரியான நேரத்தில் திருமண முடிவை யும் எடுத்ததன் மூலம், குடும்ப வாழ்க்கையையும் வெற்றிகரமானதாக்கிக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு குணசித்திர வேடத்தில் விஜய், அஜித் இருவரின் படங்களிலும் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை மறுத்தவர். அதே நேரம் தற்போது சீரியல் பக்கம் வந்து இன்றும் நடிப்பை நிறுத்தவில்லை…” என்கிற ரீதியில் பூர்ணிமாவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைச் சுவைபட விவரிக்கிறது நூல்.

பூர்ணிமா பேசும்போது, “நான் ஏதோ சாதிச்சிட்டதா என்னைப் பத்தி இந்தப் புத்தகத்துல எழுதியிருக்காங்க. சாதிச்ச பல மனிதர்களை என் வாழ்க்கை நெடூக என்னால சந்திக்க முடிஞ்சதுங்கிறதுதான் எனக்குக் கிடைச்ச திருப்தி” எனத் தன் உரையை சிம்பிளாக முடித்தார் பூர்ணிமா.

முழுக்க பெண்களால் நிரம்பி வழிந்த அந்த மேடையில் பேச அழைக் கப்பட்ட ஒரே ஆண் பாக்யராஜ்தான்.

“சினிமாவுல அவங்க பிசியா இருந்த நேரத்துல நான் போய் பொண்ணு கேட்டேன். உடனே எங்க கல்யாணத்துக்கு அவங்க அப்பா சம்மதிச்சார் பாருங்க, அதுதான் பெரிய விஷயம். சினிமாவுல முக்கால்வாசிப் பேருக்கு அந்த மனசு வராது. பூர்ணிமாவுமே அப்பவே தெளிவா முடிவெடுக்கிற வங்களா இருந்தாங்க. எப்படியோ சினிமாவையும் குடும்ப வாழ்க்கையை யும் கரெக்டா பேலன்ஸ் பண்ணி எங்க வாழ்க்கையை வாழ்ந்துட்டோம். ‘கணவன் மனைவின்னா சண்டை வந்திருக்குமே’ன்னு எல்லாம் எங்களைப் பாத்துக் கேட்டிருக்காங்க சிலர். சண்டை இல்லாத வீடு ஏது? ஆனா வாக்கு வாதம் முத்தி ஏதேச்சையா நாம கையை ஓங்கினா பொலபொலன்னு கண்ணீர் வந்திடும், அந்தப் பக்கமிருந்து. பிறகு எங்கிட்டு சண்டை போடறது? ஆனா ஒரு விஷயம்ங்க. இன்னொரு ஜென்மம்னு இருந்தா நான் பூர்ணிமா வாகவும் அவங்க பாக்யராஜாகவும் பிறக்கணும்னு ஆசைப்படுறேன். அப்பத்தான் அவங்க எனக்குச் செஞ்ச பணிவிடைகளை அவங்களுக்கு நான் திரும்ப செய்ய முடியும்” எனப் பேச்சை முடித்தார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...